கோழிக்கறி சமோசா
தேவையானப் பொருட்கள்
மைதா - அரை கிலோ
கோழிக்கறி - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
கல் உப்பு - 4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 4 தேக்கரண்டி
தேங்காய் - ஒரு கப் துருவல்
கறிவேப்பிலை - சிறு கொத்து
மல்லித்தழை - சிறு கொத்து
பட்டை - 2 சிறு துண்டுகள்
கிராம்பு - 2
பெருஞ்சீரகம் - சிறிது
எண்ணெய் - அரை கிலோ
டால்டா - 100 கிராம்
செய்முறை
மைதா - அரை கிலோ
கோழிக்கறி - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
கல் உப்பு - 4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 4 தேக்கரண்டி
தேங்காய் - ஒரு கப் துருவல்
கறிவேப்பிலை - சிறு கொத்து
மல்லித்தழை - சிறு கொத்து
பட்டை - 2 சிறு துண்டுகள்
கிராம்பு - 2
பெருஞ்சீரகம் - சிறிது
எண்ணெய் - அரை கிலோ
டால்டா - 100 கிராம்
செய்முறை
- மைதா மாவில் 2 தேக்கரண்டி கல் உப்பை முக்கால் கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி அத்துடன் 100 கிராம் டால்டாவை உருக்கி ஊற்றி பூரிமாவு போல பிசைந்து வைக்கவும்.
- பட்டை, கிராம்பு, பெருஞ்சீரகம் பொடி செய்யவும், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலை, மல்லித்தழையைக் கிள்ளி வைக்கவும்.
- கோழிக்கறியைக் கழுவி ஆவியில் வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும். அதை அம்மியில் வைத்து நசுக்கி எடுக்கவும். அரைக்க வேண்டாம்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்புத் தூள் போட்டு பொரிந்ததும், அரிந்த வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி தழை போட்டு வதக்கவும்.
- அதன் பிறகு கோழிக்கறி போட்டு மிளகாய், மல்லி தூள், மஞ்சள்தூள், 2 தேக்கரண்டி உப்பு சேர்த்து கிளறி, கடைசியாக தேங்காய்த் துருவல் கலந்து கிளறிவிட்டு எடுக்கவும்.
- மைதா மாவை எடுத்து வட்டமாக பூரி போல செய்து நடுவில் ஒரு தேக்கரண்டி கோழி பொடிமாஸ் வைத்து முக்கோணமாக மடித்து ஓரத்தை சிறிது எண்ணெய் தடவி ஒட்டி விடவும்.
- இப்படி எல்லா மாவையும் செய்து வைத்துக் கொண்டு அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் ஒரு தடவைக்கு 5 அல்லது 6 சமோசாக்களைப் போட்டு நிதானமாக பிரட்டி விட்டு பொரித்து எடுக்கவும்.

2 Comments:
At 1:51 AM, Anonymous said…
Babu, your recipe about muttai kuruma (the first one) is right, infact. Beat eggs and mix them well with chopped onion, curry leaves and corriander leaves. Apply a coat of oil on the plate that comes with the pressure cooker (aluminium or stainless steel) and pour this egg mixture and let it pressure cook just for five minutes - do not put the whistle on the cooker, just let it cook in steam. (Or, you can also cook this egg mixture in microwave-oven for five minutes like in Thulasi's style) After 5 mintes, take the plate out and cut the cooked egg into diamond shaped squares with a dosai-karaNdi and do the kuruma as your recipe number 2 says and add these egg squares into them, instead of the boiled eggs. The egg in this form will absorb the flavour of the kuruma very well than the fully-boiled eggs.
-Uma.
At 11:10 PM, D.V.Babu said…
சகோதரி உமா அவர்களுக்கு,
மிகவும் நன்றி. ஒரு ரெஸிபி பதிந்து நான்கு ரெஸிபி கிடைக்கப் பெற்றுள்ளேன். முட்டையை எத்தனை விதங்களில் குருமாவில்(குழம்பில்) சேர்க்கலாம் என்பதை தெரிந்து கொள்ள அந்த ஒரு ரெஸிபி மிகவும் உதவியுள்ளது. அனைத்தையும் குறித்துக் கொண்டுள்ளேன்.
அன்புடன்
பாபு
Post a Comment
<< Home