பிள்ளை அல்வா
செய்முறை என்னவோ கேசரியை நினைவுப் படுத்தினாலும், பால் சேர்ப்பது சற்று வித்தியாசமாக இருக்கின்றது. கேசரியை, பிள்ளை அல்வா ஆக்குவது இந்த பால்தான் என்று எண்ணுகின்றேன்.
தேவையானப் பொருட்கள்
ரவை - ஒரு கப்
பால் - ஒரு கப்
சீனி - ஒரு கப்
ஏலக்காய் - 2
முந்திரிப்பருப்பு - 6
நெய் - அரை கப்
செய்முறை
தேவையானப் பொருட்கள்
ரவை - ஒரு கப்
பால் - ஒரு கப்
சீனி - ஒரு கப்
ஏலக்காய் - 2
முந்திரிப்பருப்பு - 6
நெய் - அரை கப்
செய்முறை
- முந்திரிப்பருப்பையும், ஏலக்காயையும் அரை தேக்கரண்டி நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
- அதில் ரவையும் கொட்டி சூடு வரும் வரை வறுத்து இறக்கி வைத்து அதன் மேல் பாலைக் காய்ச்சி சூடாக ஊற்றவும்.
- ஒரு தேக்கரண்டியால் நன்றாக கலக்கி விடவும்.
- அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சீனியைக் கொட்டவும். அதில் ஒரு தேக்கரண்டி தண்ணீர் விடவும்.
- சர்க்கரை கரைந்து கொதித்து கம்பிப்பாகு பதத்திற்கு வந்ததும் ரவை கலவையை எடுத்து ஊற்றி கட்டி இல்லாமல் கிளறி விடவும்.
- ரவை வெந்து மாவு போல வரும். அப்போது நெய் விட்டுக் கிளறி ஏலக்காயைப் பொடி செய்து போட்டு முந்திரிப் பருப்பை சிறு துண்டுகள் செய்து போடவும்.
- மறுபடி கிளறி விட்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் இறக்கி ஆறவைக்கவும்.
- இதனுடன் வண்ணப் பொடி எதுவும் சேர்க்கத் தேவை இல்லை.

0 Comments:
Post a Comment
<< Home