அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Friday, May 20, 2005

கருப்பட்டிக் களி

இப்போதெல்லாம் "கருப்பட்டி" என்பது கிடைப்பதற்கு அரிதான பொருளாகி விட்டது. திண்டுக்கல், திருநெல்வேலி போன்ற பகுதிகளில் நிறைய கிடைக்கின்றது. சிலருக்கு இதன் சுவை பிடிக்காது. இருந்தாலும் இது கொஞ்சம் ஆரோக்கியமான இனிப்பு என்பது மறுக்க முடியாத உண்மை.

தேவையானப் பொருட்கள்

உளுத்தம் பருப்பு - முக்கால் கிலோ
வெள்ளை பச்சரிசி - கால் கிலோ
கருப்பட்டி - அரை கிலோ
ஏலக்காய் - 8
நல்லெண்ணெய் - கால் கிலோ

செய்முறை

  • வெள்ளை உளுத்தம் பருப்பையும் பச்சரிசியையும் தனித்தனியாக கழுவி காய வைக்கவும்.
  • நன்றாக காய்ந்த பிறகு வெறும் வாணலியைக் காய வைத்து, அதில் பருப்பையும், பச்சரிசியையும் தனித்தனியேப் போட்டு சூடு வரும் வரை வறுக்கவும்.
  • பிறகு இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து மிஷனில் மாவாக அரைத்துக் கொள்ளாவும்.
  • இதை ஸ்டாக் வைத்துக் கொண்டு காலை டிபனுக்கு பதிலாக ஒரு கப் மாவிற்கு, அரை கப் கருப்பட்டி, கால் கப் நல்லெண்ணெய் என்ற கணக்கில் களி செய்ய வேண்டும்.
  • அரை கப் கருப்பட்டியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் ஒரு கப் மாவு, அரை கப் கருப்பட்டி கரைசல், தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறி விட வேண்டும்.
  • தண்ணீர் வற்றியதும் நல்லெண்ணெய் சுற்றிலும் ஊற்றி கிளறி விட்டால் ஒட்டாமல் வரும்.
  • மிதமான தீயில் செய்வது நல்லது. இரண்டு ஏலக்காய் தட்டிப் போடவும்.

4 Comments:

  • At 9:02 PM, Muthu said…

    நன்றி பாபு. இந்தக் கருப்பட்டிக் களியைச் சிறுவயதில் சாப்பிட்டதுண்டு. கொஞ்சம் கசப்பு கலந்த இனிப்பாயிருக்கும், உடம்புக்கு நல்லது என்று சொல்லி கட்டாயப்படுத்தி சாப்பிட வைப்பார்கள். சுவை ஒன்றும் அவ்வளவு மோசமில்லை.

     
  • At 2:45 AM, துளசி கோபால் said…

    அன்புள்ள பாபு,

    இதே களியை அரிசிமாவு சேர்க்காமல் வெறும் உளுந்துமாவு வைத்துக் கிளறி, கொஞ்சம்
    நல்லெண்ணெய் தாராளமாவிட்டு, பெண் குழந்தைகள் வயசுக்கு வந்தவுடனே ரெண்டு,மூணு
    வாரம் தினம் தொடர்ச்சியாக் குடுப்பாங்க. இப்பவும் கிராமங்களிலே இது நடைமுறையில்
    இருக்குதுன்னே நினைக்கிறேன்.

    நல்ல சத்தான பொருள்தான்!!!

    என்றும் அன்புடன்,
    துளசி.

     
  • At 2:37 PM, G.Ragavan said…

    துளசி, நீங்கள் சொல்வது மிகவும் சரி. பட்டிக்காடுகளில் இன்றும் இந்த வழக்கமுண்டு.

    மிகவும் சுவையான உணவும் கூட. கருப்பட்டி மிகவும் ஆரோக்கியமான இனிப்பு.

     
  • At 5:56 PM, Anonymous said…

    i used to make it in a different way .this is my recipe.urad dal -1cup, raw rice-2 tablespoon , fenugrek seeds-1 tablespoon , karupaati-1 whole chunk, ghee or ithayam gingely oil-2 table spoon.
    soak the urad+rice+fenugreek together for atleast 2 hrs.grind it in a blender by adding 1 cup water. keep it a aside.In a round bottom vessel take 1 cup water and let it boil , while boiling slowly add the grind mixture with constant stirring.continue the stirring until the bobbles come out of the mixture. leave it for 5-10 min with occational stirring.when the consistency starts thicken add ghee or gingely oil. stir well.for stirring i use whisk it works good than a wooden spoon.

     

Post a Comment

<< Home