கொண்டைக்கடலை குழம்பு
தேவையானப் பொருட்கள்
கொண்டைக்கடலை - 100 கிராம் (கறுப்பு கடலை)
புளி - பெரிய எலுமிச்சை அளவு
குழம்பு பொடி - 3 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரைத் தேக்க்ரண்டி
பெரிய வெங்காயம் - 3
உருளைக்கிழங்கு - 2
தக்காளி - 3
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கொண்டைக்கடலை - 100 கிராம் (கறுப்பு கடலை)
புளி - பெரிய எலுமிச்சை அளவு
குழம்பு பொடி - 3 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரைத் தேக்க்ரண்டி
பெரிய வெங்காயம் - 3
உருளைக்கிழங்கு - 2
தக்காளி - 3
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை
- கொண்டைக்கடலையை கழுவி, முதல் நாள் இரவே ஊற வைத்துவிடவும்.
- ஊற வைத்த கொண்டைக்கடலையை குக்கரில் 15 நிமிடம் வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளிப்பழம் அனைத்தையும் சின்னச் சின்னத் துண்டங்களாக அரிந்து வைத்துக் கொள்ளவும்.
- புளியை மூழ்கும் அளவிற்கு நீர் விட்டு, ஊற வைத்து, சற்றுக் கெட்டியான கரைசலாகக் கரைத்துக் கொள்ளவும்.
- முதலில் வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடேறிய பிறகு, கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு, கிள்ளி வைத்த மிளகாயைப் போட்டு தாளிக்கவும்.
- பிறகு கடலைப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பிறகு நறுக்கிய காய்களைப் போட்டு நன்றாக 5 நிமிடம் வதக்க வேண்டும்.
- அதன் பிறகு 3 தேக்கரண்டி குழம்பு மிளகாய்தூளை போட்டு மீண்டும் 3 நிமிடம் வதக்க வேண்டும்.
- பிறகு புளி கரைசலை சேர்க்க வேண்டும். உப்பு தேவையான அளவும், சிறிது மஞ்சள் தூளும் சேர்க்கவும்.
- இப்போது வேக வைத்த கருப்பு கொண்டக்கடலையை சேர்க்கவும்.
- சுமார் 15 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து, கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டு இறக்கவும்.

0 Comments:
Post a Comment
<< Home