கிச்சடி சோறு
மன்னிக்கவும். ஓரிடத்தில் இல்லாமல் ஊர் ஊராக சுற்ற வேண்டிய நிலையில், தொடர்ச்சியாக குறிப்புகளைக் கொடுக்க இயலவில்லை. பல ஊர்களுக்கும் பயணித்து, பலதரப்பட்ட மக்களைச் சந்தித்து, பல்வேறு சமையல் குறிப்புகளைச் சேகரித்து அறுசுவை இணையத்தளத்தில் வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளேன். இந்த நிலையில் தினமும் ஒரு குறிப்பினை எனது வலைப்பதிவில் எழுதுவது சற்று கடினமாக இருக்கின்றது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பதிந்து விடுகின்றேன். அடிக்கடி காணாமல் போக நேரிட்டால் கவலை கொள்ளவேண்டாம். உங்களுக்காகத்தான் ஊர் சுற்றிக் கொண்டுள்ளேன் என்று முடிவு செய்துகொள்ளுங்கள்.
இன்றைய சிறப்புணவு - கிச்சடி சோறு. அதிராம்பட்டினம், கீழக்கரை பக்கம் சற்று பிரபலமான, இஸ்லாமிய உணவு இது. கிட்டத்திட்ட பிரியாணி மாதிரிதான்.
தேவையானப் பொருட்கள்
பிரியாணி அரிசி - அரைப் படி
தேங்காய் - ஒன்று
பாசிப்பருப்பு - 1 கப்
ஆட்டு ஈரல் - கால் கிலோ
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 3
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 5
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
கசகசா - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - கால் கிலோ
ஏலக்காய் - 3
பட்டை - 2 சிறு துண்டு
கிராம்பு - 4
நெய் - கால் கிலோ
உப்பு - தேவையான அளவு
செய்முறை
இன்றைய சிறப்புணவு - கிச்சடி சோறு. அதிராம்பட்டினம், கீழக்கரை பக்கம் சற்று பிரபலமான, இஸ்லாமிய உணவு இது. கிட்டத்திட்ட பிரியாணி மாதிரிதான்.
தேவையானப் பொருட்கள்
பிரியாணி அரிசி - அரைப் படி
தேங்காய் - ஒன்று
பாசிப்பருப்பு - 1 கப்
ஆட்டு ஈரல் - கால் கிலோ
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 3
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 5
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
கசகசா - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - கால் கிலோ
ஏலக்காய் - 3
பட்டை - 2 சிறு துண்டு
கிராம்பு - 4
நெய் - கால் கிலோ
உப்பு - தேவையான அளவு
செய்முறை
- அரிசியையும், பாசிப்பருப்பையும் தனித்தனியே சுமார் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஈரலைத் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
- இஞ்சி பூண்டினை விழுதாக அரைத்துக்கொள்ளவும். கசகசா, சோம்பு, சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- தேங்காயைத் துருவி, ஒரு டம்ளர் அளவிற்கு கெட்டிப் பாலைத் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். இரண்டு லிட்டர் அளவிற்கு பால் எடுத்துக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி உருகியதும், நறுக்கின வெங்காயத்தைப் போட்டு சிவக்க வதக்கவும்.
- பிறகு அரைத்த இஞ்சி பூண்டு விழுதினைப் போட்டு வதக்கவும்.
- அதன்பின் ஏலம், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கிளறி, பிறகு ஈரல் துண்டுகள், தக்காளி ஆகியவற்றைப் போட்டு நன்கு பொரியவிடவும். இத்துடன் மிளகாய்த்தூள், மிளகுத்தூள் சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
- தண்ணீராக உள்ள தேங்காய்ப்பாலில் அரைத்த கசகசா கலவை, மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து கலக்கி, குருமாவில் ஊற்றவும்.
- தேங்காய்ப்பால் கொதிக்க ஆரம்பித்ததும், ஊற வைத்துள்ளள அரிசியையும், பாசிப்பயிரையும் தேங்காய்ப்பாலில் போட்டுக் கிளறி மூடவும்.
- கொதித்த பிறகு தீயைக் குறைத்து வைத்து சிறிதாக எரியச் செய்யவும். சோறு முக்கால் வேக்காடு வெந்ததும், மூடி மீது தம் வைத்து சிறிது நேரம் வைத்து இருந்து, நன்றாக வெந்ததும் இறக்கி, தேவையெனில் சிறிது நெய் ஊற்றிக் கிளறி, பரிமாறவும்.

2 Comments:
At 1:39 AM, sadeekali said…
hi babu sir..
i appreciate you for your precious job as collection of good cooking methods. This kichadi soru procedure is very best for taste. please give more cooking methods for world wide tamil people.
At 11:40 PM, D.V.Babu said…
தங்களுடைய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
ஆச்சரியமாய் இருக்கின்றது. நான் வலைப்பதிவதை நிறுத்தி நான்கைந்து மாதங்கள் ஆகியும், இன்றும் பலர் இதனைப் பார்வையிடுவதை எனது வருகையாளர்கள் புள்ளிவிபரக் கணக்கு தெரிவிக்கின்றது.
சில தவிர்க்க இயலாத காரணங்களால் வலைப்பதிவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளேன். உங்களுக்கு தேவையான அனைத்து சமையல் குறிப்புகளும் எனது இணையத்தளமான http://www.arusuvai.com ல் கிடைக்கும். தயவுசெய்து அங்கு சென்று பார்வையிடவும்.
தற்போது எனது இணையத்தளத்தினை மாற்றி அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு இருப்பதால், வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அந்தப் பணி முடிந்து, புதிய அறுசுவை தளத்தினை வெளியிட்டப் பிறகு, மீண்டும் வலைப்பதிய வருகின்றேன். அது உணவு சம்பந்தப்பட்டதுதான் என்றாலும், நிச்சயம் வித்தியாசமான ஒன்றாய் இருக்கும்.
அன்புடன்
பாபு
www.arusuvai.com
Post a Comment
<< Home