புளி அவல் உப்புமா
தேவையானப் பொருட்கள்
கெட்டியான அவல் - 2 டம்ளர்
புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு
மிளகாய் வற்றல் - 3
பச்சைமிளகாய் - 4
கடுகு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
வெல்லம் - பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு - 3 தேக்கரண்டி
தாளிக்க எண்ணெய் - ஒன்றரை மேசைக்கரண்டி
மஞ்சள் பொடி - அரைத்தேக்கரண்டி
செய்முறை
கெட்டியான அவல் - 2 டம்ளர்
புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு
மிளகாய் வற்றல் - 3
பச்சைமிளகாய் - 4
கடுகு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
வெல்லம் - பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு - 3 தேக்கரண்டி
தாளிக்க எண்ணெய் - ஒன்றரை மேசைக்கரண்டி
மஞ்சள் பொடி - அரைத்தேக்கரண்டி
செய்முறை
- முதலில் தண்ணீரில் புளி, உப்பு, வெல்லம் போட்டு அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு நன்றாகக் கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
- அவலை நன்றாக தண்ணீர் விட்டுக் களைந்து, கல்லரித்துக்கொண்டு, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை இறுத்து விட்டு போட வேண்டும்.
- அதில் கரைத்த புளித்தண்ணீரை விட்டு இரண்டு மூன்று மணிநேரம் ஊறவைக்கவும்.
- அவல் மேல் அரை அங்குல அளவு புளித் தண்ணீரையும் வெறும் தண்ணீரையும் சேர்த்து, அதில் மஞ்சள் தூளையும் போடவும்.
- அதன் பிறகு வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டுத் தாளிக்கவும்.
- பிறகு நறுக்கிய பச்சைமிளகாய், மிளகாய் வற்றல் போட்டு வறுபட்டவுடன், ஊறவைத்த அவலையும் போட்டு நன்றாக கிளற வேண்டும்.
- எல்லாம் சேர்த்து கால் மணி நேரம் வறுபட்டவுடன் இறக்கிவைக்கவேண்டும். தேவையானால் அரை மூடி தேங்காய் துருவி போடலாம்.

2 Comments:
At 5:16 PM, G.Ragavan said…
புளி அவல் பற்றி கேள்விப் பட்டதோடு சரி. சாப்பிட்டதில்லை. இந்த பக்குவத்தைத் தந்ததற்கு நன்றிகள்.
சரி. தட்டையா இருக்குற அவுல போடனுமா? இல்ல கெட்டி அவுலப் போடனுமா? அவுல ரொம்பவும் ஊற வெச்சா தூளாயிருமே!
At 9:03 PM, D.V.Babu said…
நன்றி ராகவன். கெட்டி அவல் என்று தேவையான பொருட்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில மணி நேரம் ஊற வைப்பதால் சோறு பதத்திற்கு வருமாம். உடையாது என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர்.
Post a Comment
<< Home