பில்ல குடுமு
பச்சரிசி - கால் படி(உடைத்தது)
பயத்தம்பருப்பு - 100 மில்லி
கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
தேங்காய் - ஒன்று
அரிசிமாவு - 100 மில்லி
வெல்லம் - 200 கிராம்
முந்திரி - 4
கசகசா - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
- முதலில் பயத்தம்பருப்பை குழையாமல் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். கடலைப்பருப்பினை ஊற வைத்துக் கொள்ளவும்
- . தேங்காயில் அரை மூடியினைத் துருவிக் கொள்ளவும். பின் ஒரு வாணலியில் முக்கால் லிட்டர் தண்ணீர் வைத்து தேவையான உப்பு போட்டு கொதிக்க வேண்டும்.
- கொதிக்கும் போது ரவையாக உடைத்த பச்சரிசியைக் கொட்டி மூடி வைக்க வேண்டும்.
- 5 நிமிடம் கழித்து இறக்கி, ஊற வைத்த கடலைப்பருப்பு, வேகவைத்த பயத்தம்பருப்பு துருவிய தேங்காய் அனைத்தும் போட்டு நன்கு கிளற வேண்டும்.
- பின் கை பொறுக்கும் சூட்டில் சிறுசிறு வடை போல் தட்டி இட்லி தட்டில் வைத்து இட்லி போல் வேக வைத்து எடுக்க வேண்டும்.
- இதற்கு தொட்டுக்கொள்ள கீழ்கண்டவாறு பாயசம் செய்து கொள்ளவும்.
- அடுப்பில் 100 மில்லி தண்ணீர் வைத்து 2 சிட்டிகை உப்பு போட்டு தண்ணீர் கொதிக்கும் போது அரிசி மாவினைக் கொட்டி கிளற வேண்டும்.
- கொழுக்கட்டை மாவுபோல் கிளறி இறக்கி தேன்குழல் அச்சில் போட்டு ஒரு தட்டில் பிழிந்து ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம்.
- தீடீர் இடியாப்ப மாவு அல்லது கொழுக்கட்டை மாவு இருந்தாலும் பயன்படுத்தலாம். மீதமுள்ள அரை மூடித் தேங்காயில் கால் மூடியைத் துருவி எடுத்துக் கொள்ளவும்.
- பின் மிக்ஸியில் தேங்காய், கசகசா இரண்டும் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் வெல்லம் போட்டு கரைந்ததும் கல், மண் இல்லாமல் வடிகட்டிக் கொதிக்கவிடவும். அந்த
- நீர் கொதிக்கும் போது அரைத்த தேங்காய், கசகசா விழுதை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து இந்த வெல்லப்பாகில் ஊற்றவும்.
- பின் வேக வைத்த குழல்களை எடுத்து இந்த வெல்லம் விழுது கரைசலில் போட்டு, 10 நிமிடம் கழித்து இறக்கி முந்திரி தாளித்து கொட்டவும்.
