சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

"இன்னல்களும், பிரச்சினைகளும் நாம் வளர்ச்சி அடைவதற்காக கடவுள் நமக்கு வழங்கும் வாய்ப்புகள் என்பது எனது நம்பிக்கை.." நமது குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் வாசகத்துடன் நம்மை வரவேற்கின்றது சர். ஐசக் நியூட்டன் கேட்டரிங் கல்லூரி. கல்லூரியின் உள்ளே நுழைந்த உடன், மாணவர்கள் மனதில் நம்பிக்கையை விதைக்கும் வண்ணம், பார்க்கும் இடங்களில் எல்லாம், ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்.
கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு, சில வருடங்களிலேயே நல்ல வளர்ச்சியைக் கண்டு இருப்பது அதன் உள் அமைப்பிலேயே தெரிகின்றது. விசாலமான வகுப்பறைகள், மாதிரி உணவு விடுதி, ஏராளமான உபகரணங்களைக் கொண்டுள்ள மிகப் பெரிய சமையலறை, வரவேற்பறை, நூலகம், கணினி அறை என்று சகல வசதிகளையும் கொண்டுள்ளது. வெளி மாவட்ட மாணவர்களைத் தவிர்த்து, பல வெளி மாநில மாணவர்களையும் இங்கே பார்க்க முடிகின்றது.


அங்கீகாரம்

தமிழக அரசின் அங்கீகாரம் பெற்றுள்ள இக்கல்லூரியில், Food Production, Food and Beverage Service, House Keeping, Front Office ஆகிய ஒரு வருட டிப்ளமோ பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதனைத் தவிர Diploma in Catering and Hotel Management என்ற மூன்று வருட டிப்ளமோ பயிற்சியும் அளிக்கப்படுகின்றது. பஞ்சாப் டெக்னிக்கல் யுனிவர்சிடியின் அங்கீகாரம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு. உணவுவிடுதி நிர்வாகத் துறையில் இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளுக்கான வகுப்புகளும் நடத்தப்பட்டு, பஞ்சாப் டெக்னிக்கல் யுனிவர்சிடியின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.


கல்லூரியின் சிறப்புகள்

இக்கல்லூரியின் பணியினைப் பாராட்டி, கடந்த 2002-03 ஆம் ஆண்டு, ஜேசீஸ் சங்கம் கமல்பத்ரா விருதினை வழங்கி கௌரவித்துள்ளது. நாகை கல்வி மாவட்ட அளவில் கடந்த 3 ஆண்டுகளாக தமிழக அரசு தாட்கோ நிறுவனம் மூலம் அதிக மாணவர்களை இக்கல்லூரிக்கு அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு இங்கு பயிற்சி பெற்று சென்ற அனைத்து மாணவர்களும், வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த ஆண்டு முதல் பயிற்சிக்கும், வேலை வாய்ப்பிற்கும் ஒரு இங்கிலாந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

திறன் மிகுந்த பயிற்சியாளர்கள், எளிய பயிற்சி முறை, பல மாநிலங்களில் உள்ள நட்சத்திர உணவு விடுதிகளில் நேரடி பயிற்சிகள், தனி மனித ஆளுமை திறனை வளர்த்துக் கொள்ள சிறப்பு பயிற்சிகள், ஆங்கிலம், பிரெஞ்ச், இந்தி ஆகிய மொழிகளுக்கென சிறப்பு பயிற்சி வகுப்புகள் என்ற சிறப்பம்சங்களை கொண்டு, ஏராளமான பயிற்சி வகுப்புகளை நடத்தி, பயிலும் மாணவர்களது திறனை மென்மேலும் செம்மைப்படுத்துவது இக்கல்லூரியின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணம்.

கல்லூரி நிர்வாகம்

தண்டபாணி கல்வி மற்றும் தர்ம அறக்கட்டளை சார்பாக இக்கல்லூரி இயங்கி வருகின்றது. கல்லூரியின் தாளாளராக திரு. சுவாமிநாதன் அவர்களும், இயக்குனராக திரு. ஆனந்தன் அவர்களும், கல்லூரி முதல்வராக திரு. மகேஸ்வரன் அவர்களும் பொறுப்பேற்று, கல்லூரியை சிறந்த முறையில் நடத்தி வருகின்றனர். இக்கல்லூரியின் கௌரவ ஆலோசகராக தமிழ்நாடு ஓட்டல் சங்கத் துணைத்தலைவர் திரு. பி.என். குப்புசாமி அவர்களும், ஆலோசகராக ரோட்டரி 2980ன் முன்னாள் மாவட்ட ஆளுனர் திரு. கோவிந்தராஜூ அவர்களும் உள்ளனர்.

கல்லூரி முகவரி

சர் ஐசக் நியூட்டன் கேட்டரிங் கல்லூரி
1298, பப்ளிக் ஆபிஸ் ரோடு,
காடம்பாடி
நாகப்பட்டினம் - 611 001
தொலைபேசி: 04365-248595
செல்பேசி: 9842465111

   
இக்கல்லூரியில் நடத்தப்படும் பயிற்சிகள் மற்றும் பாடத்திட்டங்கள்
   
இக்கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்ப படிவத்தினை இங்கிருந்து இலவசமாக பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம்.
   

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி