சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கேப்ஸிகம் பாத்

குடமிளகாய் கால் கிலோ
அரிசி அரை கிலோ
தனியா ஒரு தேக்கரண்டி
சீரகம் ஒரு தேக்கரண்டி
மிளகு ஒரு தேக்கரண்டி
தேங்காய்த்துருவல் ஒரு தேக்கரண்டி
கிராம்பு 2
ஏலக்காய் ஒன்று
பட்டை சிறிய துண்டு
மிளகாய் வற்றல் 2
காரட் ஒன்று
எண்ணெய் ஒரு தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு

  • முதலில் குடைமிளகாயை விதை நீக்கி பொடியாக அரிந்து கொள்ளவும்.
  • தனியா, சீரகம், மிளகு, கிராம்பு, ஏலக்காய், பட்டை, மிளகாய் வற்றல் ஆகியவற்றை வாணலியில் எண்ணெய் விடாமல் நன்கு வறுத்து ஆறியவுடன் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி குடை மிளகாயை அலம்பி பொடியாக நறுக்கிப் போட்டு வதக்கவும்.
  • பிறகு தீயைச் சிறிதாக வைத்துக் கொண்டு மிளகாய் வேகும் வரை தட்டால் மூடி வேகவிடவும். அவ்வபோது திறந்து பார்த்து கிளறிவிட வேண்டும்.
  • கடைசியில் பொடி செய்த மசாலா மற்றும் உப்பு போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
  • அரிசியை நன்கு களைந்து நீரை வடிய விட்டு இலேசாக நெய் அல்லது எண்ணெய் விட்டு வறுத்து ஒரு பங்கு அரிசிக்கு 2 பங்கு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
  • அரிசி வெந்தவுடன் செய்து வைத்துள்ள குடமிளகாய் மசாலாவைப் போட்டு தேவையான உப்பு போட்டு நெய் ஊற்றி கலந்து வைத்து 5 நிமிடம் கழித்து சாப்பிடவும்.
  • துருவிய காரட்டை மேலே தூவி அலங்காரம் செய்யலாம்.
  • இந்த குடைமிளகாய் சாதத்திற்கு வெங்காயம், பூண்டு சேர்க்க கூடாது. ஏனென்றால் குடமிளகாயில் உள்ள வாசனை வெங்காயம், பூண்டு சேர்த்தால் தெரியாது.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் பா. லதா, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி