சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கோதுமை அடை

சம்பாகோதுமை குருணை 200 கிராம்
கோதுமை மாவு 100 கிராம்
சின்ன வெங்காயம் 100 கிராம்
மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி
சோம்புத்தூள் 2 தேக்கரண்டி
பூண்டு 5 பல்
இஞ்சி ஒரு சிறிய துண்டு
முருங்கைக்கீரை சிறு கைப்பிடி அளவு
உப்பு 2 தேக்கரண்டி
எண்ணெய் 100 மில்லி

  • கோதுமை குருணையை அரை லிட்டர் தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
  • வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பூண்டு, இஞ்சியை தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஊறிய கோதுமை ரவையுடன் கோதுமை மாவையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
  • அதோடு மிளகாய்த்தூள், சோம்புத்தூள், இஞ்சி, பூண்டு, உப்பு, முருங்கைக்கீரை அனைத்தையும் நன்கு கலந்து அடை வார்க்கும் பக்குவத்தில் கரைத்துக் கொள்ள வேண்டும்.
  • தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானவுடன், ஒரு கரண்டி மாவை ஊற்றி பரப்பி விட வேண்டும்.
  • ஓரத்திலும் நடுவிலும் அரை தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி விட வேண்டும். 2 நிமிடம் கழித்து திருப்பிப் போட வேண்டும்.
  • வெந்த பிறகு எடுத்து விடலாம்.
  • முருங்கைக்கீரைக்கு பதிலாகக் கறிவேப்பிலை போட்டுக் கொள்ளலாம். தேங்காய்த் துருவலையும் சேர்த்துக் கொள்ளலாம்.
  • இந்த சிற்றுண்டி சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்ல உணவு.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 3 நபர்களுக்கு
வழங்கியவர் எ. லீமா ரோஸ், நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி