சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

நவதானிய காய் பக்கோடா

சத்துமாவு கால் கிலோ
காய்கறி கால் கிலோ
உப்பு 2 தேக்கரண்டி
எண்ணெய் அரை கிலோ
கரம் மசாலா பவுடர் 2 தேக்கரண்டி
வெங்காயம் ஒன்று
கொத்தமல்லி சிறிது
கறிவேப்பிலை ஒரு கொத்து

  • கம்பு, கேழ்வரகு, முழுபாசிப்பயிறு, கொண்டைக்கடலை, சோளம், கோதுமை, புழுங்கல் அரிசி, பொட்டுக்கடலை, வேர்க்கடலை தலா 100 கிராம் வாங்கி கல் நீக்கி, கழுவி தனித்தனியாக காய வைத்து தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும்.
  • பொட்டுக்கடலை, வேர்க்கடலையை கழுவி காய வைக்கத் தேவையில்லை.
  • இவையனைத்தையும் மிஷினில் கொடுத்து மாவாக அரைத்துக் கொண்டு சலித்து ஒரு டப்பாவில் கொட்டி வைக்கவும். இதுவே சத்து மாவு.
  • தேவையான போது எடுத்து அளவாக கல் உப்புத் தூள், கரம் மசாலாத்தூள் போட்டு கலந்து கொள்ளவும்.
  • காய்கறிகளுக்கு நாட்டுக்காய்கறிகளான கத்திரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், கொத்தவரங்காய், செளசெள, பீர்க்கங்காய், புடலங்காய் இப்படி இருக்கலாம்.
  • அல்லது காரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், பீட்ருட், நூல் கோல், குடைமிளகாய், காலிஃபிளவர் இப்படியும் இருக்கலாம்.
  • இங்கிலீஷ் காய்கறி அல்லது நாட்டுக் காய்கறிகள் மட்டும் வாங்கவும். இரண்டையும் கலந்து விட வேண்டாம்.
  • காய்கறிகளை கால் கிலோ எடுத்து பொடியாக நறுக்கி விட்டு கழுவி இட்லி தட்டு அல்லது குக்கரிலோ ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
  • அதை மாவில் கொட்டி அத்துடன் ஒரு பெரிய வெங்காயம் பொடியாக வெட்டிப் போட்டு, மல்லித்தழை, கறிவேப்பிலைக் கொத்து கிள்ளிப் போட்டு வெந்த காய்கறிகளை எல்லாம் போட்டு கலந்து பிசைந்து வைக்கவும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து அரை லிட்டர் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிது மாவை எடுத்து பரவலாக பிசிறி விடவும்.
  • அல்லது சிறு சிறு உருண்டைகளாகச் செய்து போட்டு பொன்னிறமாக சிவந்து வெந்ததும் எடுத்து விடவும்.
  • மொறுமொறுப்பாக வேண்டும் என்றால் சிவக்க விட்டு எடுக்கவும். இதற்குத் தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை.
  • புதினா சட்னிதேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். கடைகளில் விற்கும் சத்துமாவு வாங்கியும் அதற்குத் தகுந்தாற் போல் காய்கறி, உப்பு சேர்த்து பிசைந்தும் செய்யலாம்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 5 நபர்களுக்கு
வழங்கியவர் எஸ்.காஞ்சனா, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி