சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

டிரைகலர் ரைஸ்

வேகவைத்த சாதம் 3 கப்
தக்காளி ஒன்று
பீட்ரூட் பாதி
காரட் பாதி
மிளகாய்த்தூள் அரை தேக்கரண்டி
மசாலா கால் தேக்கரண்டி
நெய் ஒரு மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
பனீர் துருவியது கால் கப்
சீஸ் துருவியது கால் கப்
மிளகுத்தூள் அரை தேக்கரண்டி
புதினா இலை 5
மல்லித்தழை சிறிது
பச்சைமிளகாய் ஒன்று
தேங்காய் துருவல் ஒரு தேக்கரண்டி
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு ஒரு பல்

  • முதல் கலர் சாதத்திற்கு(சிகப்பு வண்ண சாதம்):
  • தக்காளி பீட்ரூட், காரட் ஆகியவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • நெய்யை காயவைத்து அரைத்த கலவையை சேர்த்து உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போக கிளறி ஒரு கப் சாதத்தை அதனுடன் கலந்து விடவும்.
  • இரண்டாவது கலர் சாதத்திற்கு(வெண்மை நிற சாதத்திற்கு):
  • துருவிய பனீர் மற்றும் சீஸ் ஆகியவற்றுடன் ஒரு சிட்டிகை உப்பும் அரைத்தேக்கரண்டி மிளகுத்தூளும் சேர்த்து சாதத்தில் இட்டு கிளறிக் கொள்ளவும்.
  • மூன்றாவது கலர் சாதம் (பச்சை வண்ண சாதம்):
  • புதினா இலை, மல்லித்தழை, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், இஞ்சி, பூண்டு ஆகிய ஆறு பொருட்களையும் நன்றாக அரைத்து. நெய்யை காயவைத்து அரைத்த விழுதைச்சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  • இதை ஒரு கப் சாதத்தில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
  • ஒரு சிறிய கிண்ணத்தில் நெய் அல்லது எண்ணெய் தடவி சிவப்பு கலரில் இருக்கும் முதல் சாதத்தைப் பரவினாற் போல் போடவும்.
  • அதன் மேல் இரண்டாவதாக வெள்ளை சாதம், கடைசியில் பச்சை சாதம் ஒன்றன் மேல் ஒன்றைப் போட்டு அழுத்திவிடவும்.
  • கிண்ணத்துடன் பத்து நிமிடங்கள் ஆவியில் வைத்தெடுத்து ஆறவிட்டு தட்டில் கவிழ்த்து பரிமாறவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் திருமதி. சௌம்யா, நாகப்பட்டினம்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி