சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

 
கடந்த 27-02-2005, ஞாயிறு அன்று, நாகை மகளிர் சங்கத்தினருடன் இணைந்து நாகை வட்ட அளவிலான முதல் கட்ட சமையல் போட்டி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக கவிஞர் கண்ணதாசனின் புதல்வியர்களான திருமதி. ரேவதி சண்முகம் மற்றும் திருமதி. கலைச்செல்வி சொக்கலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். நமது அறுசுவை இணையத்தளத்தில் சமையல் குறிப்புகள் எழுதி வரும், ஷார்ஜாவைச் சேர்ந்த திருமதி. மனோ சாமிநாதன் அவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார். இவர்கள் மூவரும் நடுவர்களாக இருந்து சிறந்த உணவுகளைத் தேர்வு செய்தனர்.

போட்டி தினத்திற்கு 10 நாட்களுக்கு முன்பில் இருந்தே நாகை நகரமும் அதன் சுற்றுபுற கிராமங்களும் சற்று பரபரப்பாய்தான் இருந்தன. நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையில் பெண்கள் கலந்து கொள்ள ஆர்வம் காட்டினர். முதல் கட்டமாக, வந்து குவிந்த நானூற்றுக்கும் அதிகமான சமையல் குறிப்புகளில் இருந்து 100 குறிப்புகளை உமா ஹோட்டல்ஸ் அதிபர் உயர்திரு P.N. குப்புசாமி அவர்கள் தலைமையில் சமையல் கலை வல்லுனர்கள் அடங்கிய நடுவர் குழு தேர்ந்தெடுத்தது. அசைவம், இனிப்பு, காரம், சிற்றுண்டி.. என உணவுகள் 10 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிற்கும் 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான இறுதிச் சுற்று 27 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் நாகை D.B.G. திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

ஒன்றிரண்டு பேரைத் தவிர முதல் சுற்றில் தேர்வு பெற்ற அனைவருமே, தாங்கள் எழுதிக் கொடுத்திருந்த உணவினைத் தயார் செய்து கொண்டு எடுத்து வந்திருந்தனர். தொலைக்காட்சிகளின் தாக்கம் இந்த போட்டியில் நன்கு தெரிந்தது. கிராமத்தில் இருந்து வந்திருந்தவர்கள்கூட வித்தியாசமான முறையில் உணவுகளை அலங்கரித்துப் பார்வைக்கு வைத்திருந்தனர். இது நிச்சயம் எதிர்பாராத ஒன்று. பார்வையாளர்கள் பலரும் கண்டு அதிசயித்தனர். நாகை நகரைப் பொறுத்தவரை அதிக அளவில் பெண்கள் பங்கு கொண்ட முதல் சமையல் போட்டி இதுதான். அரங்கம் நிறைந்த பெண்கள் கூட்டம். பரவலாக நகரின் பல பகுதிகளில் இருந்தும், சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் பலர் கலந்து கொண்டது இப்போட்டியின் சிறப்பு.
மூன்று மணிக்கே ஆரம்பித்து இருக்க வேண்டிய போட்டி, ஒன்றரை மணி நேர தாமதத்திற்குப் பிறகு துவங்கியது. முதல் போட்டி மற்றும் முதல் அனுபவம் என்பதால் ஆரம்பத்தில் சில குளறுபடிகள் இருந்தன. அவற்றையெல்லாம் சரி செய்து போட்டியினை ஆரம்பிக்க நிறைய தாமதமாகிவிட்டது. குறைகள் அடுத்தடுத்து வரும் போட்டிகளில் கண்டிப்பாய் களையப்படும்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் மற்றும் இரண்டாம் இடத்திற்கான சிறந்த உணவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. நடுவர் குழுவிற்கு இது அவ்வளவு சுலபமான வேலையாக இருக்கவில்லை. ருசி, செலவு, அலங்காரம், ஆரோக்கியம் ஆகியவற்றைப் பொறுத்து மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தேர்வு நடந்தது. ஒவ்வொரு உணவினையும் பல முறை ருசித்து, உணவில் உள்ள அத்தனை நுணுக்கமான விசயங்களையும் ஆராய்ந்து நடுவர் குழு மதிப்பெண்கள் கொடுத்த விதம் ஆச்சரியப்படவைத்தது.
ஒவ்வொரு பிரிவிலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் இரண்டு பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவிற்கு மாதர் சங்கத் தலைவி திருமதி. ரங்கநாயகி ராஜகோபாலன் தலைமை வகித்தார். திரு. P.N. குப்புசாமி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். வெற்றிப் பெற்றோருக்கு சிறப்பு விருந்தினர்களான திருமதி. ரேவதி சண்முகம் அவர்களும் திருமதி. கலைச்செல்வி சொக்கலிங்கம் அவர்களும் பரிசுகள் வழங்கினர். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஸ்ரீ பிள்ளை ஏஜென்சிஸ் உரிமையாளர் திரு. நடராஜன் அவர்கள் ஆசிர்வாத் ஆட்டா மற்றும் உப்பு பாக்கெட்டுகள் வழங்கினார். இதனைத் தவிர தினகரன் ஏஜென்ட் திரு. சீனிவாசன் அவர்கள் வழங்கிய சிறப்பு பரிசுகளும் அனைவருக்கும் கொடுக்கப்பட்டன. இறுதியில் மாதர் சங்க செயலர் திருமதி. மல்லிகா வெங்கட்ராமன் நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது.
 
போட்டியின் சில துளிகள், புகைப்பட வடிவில் உங்கள் பார்வைக்கு:
 
பரிசு பெற்ற உணவுகளின் செய்முறைக் குறிப்புகளை இங்கே காணலாம்:
 
போட்டியில் கலந்து கொண்டு ஆறுதல் பரிசுகள் பெற்ற இதர உணவுகள்
 
இதரப் போட்டிகள் பக்கங்களுக்குச் செல்ல..
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி