சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கொத்துக்கறி கயிறு கட்டி கோலா

கொத்துக் கறி கால் கிலோ
பெரிய வெங்காயம் 3
பச்சைமிளகாய் 3
இஞ்சி விழுது ஒரு தேக்கரண்டி
பூண்டு 15 பல்
சோம்புப்பொடி ஒரு தேக்கரண்டி
பொட்டுக்கடலை 100 கிராம்
கசகசா 25 கிராம்
தேங்காய் பூ ஒரு மூடி
முந்திரிபருப்பு 50 கிராம்
கரம்மசாலா பொடி ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
வாழை நார் சிறிது
எண்ணெய் பொரித்து எடுக்க

  • தேங்காய்ப்பூ, கசகசா, பொட்டுக்கடலை மூன்றையும் வறுத்து மிக்ஸியில் பொடி பண்ணவும்.
  • சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு சட்டியில் உள்ள எண்ணெயில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • இஞ்சி விழுது, நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலாதூள் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு வேக வைத்த கொத்துக்கறியை சேர்த்து நன்கு வதக்கவும். கறி வதங்கியவுடன் பொடி பண்ணிய தேங்காய் பூ கலவையை கொட்டிக் கிளறவும்.
  • அதன் பின் வறுத்த முந்திரியைச் சேர்த்து வதக்கவும். உப்பு தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கிளறி வதக்கவும்.
  • கலவை எல்லாம் ஒன்றாக சேர்ந்ததும் அடுப்பில் இருந்து சட்டியை இறக்கி வேறு கிண்ணத்தில் மாற்றி சிறிது ஆறவிடவும்.
  • ஆறிய பிறகு எலுமிச்சை பழம் அளவு உருண்டை உருட்டி அதன் மேல் வாழை நார் கொண்டு சுற்றவும்.
  • எல்லா உருண்டைகளையும் தயார் செய்து பிறகு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
வழங்கியவர் திருமதி. J. கலைச்செல்வி, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி