| நாகை மாதர் சங்கத்தினருடன் இணைந்து
அறுசுவை தனது முதல் சமையல் போட்டியை நாகையில் நடத்தியது. அப்போட்டியின்
போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களின் தொகுப்பினை இங்கே காணலாம்.
முழுவதும் படங்களைக் கொண்ட பக்கம் என்பதால், படங்களை நிரப்பி பக்கம்
முழுமையாய் தெரியச் சற்று நேரம் எடுக்கும். பொறுத்திருக்கவும். |
 |
 |
| நடுவர்கள் திருமதி. மனோ சாமிநாதன்,
திருமதி. கலைச்செல்வி சொக்கலிங்கம், திருமதி. ரேவதி சண்முகம். ஒவ்வொரு
உணவினையும் தீவிரமாய் பரிசீலித்து மதிப்பெண்கள் வழங்குகின்றனர். |
 |
 |
| ஒவ்வொரு உணவுக் குறிப்பினையும் படித்துப்
பார்த்து தயார் செய்யப்படும் முறை மற்றும் சேர்க்கப்படும் பொருள்களை
அறிகின்றனர். |
 |
 |
| திருமதி. கலைச்செல்வி சொக்கலிங்கம்
ஒவ்வொரு உணவினையும் ருசித்துப் பரிசோதிக்கின்றார். |
 |
 |
| ONGC மணிவண்ணன் அவர்கள் வெற்றிப்
பெற்ற உணவினை ருசி பார்க்கின்றார். ஸ்ரீ பிள்ளை ஏஜென்சிஸ் உரிமையாளர்
திரு. நடராஜன் அவர்கள் ஆசிர்வாத் ஆட்டா மாவு மற்றும் உப்பு பாக்கெட்டுகளை
வழங்குகின்றார். |
 |
 |
| இடது: மாதர் சங்க செயலாளர் திருமதி.
மல்லிகா வெங்கட்ராமன், திருமதி. ரேவதி சண்முகம், திருமதி. மனோ சாமிநாதன்.
வலது: திரு. P.N. குப்புசாமி, திருமதி. கலைச்செல்வி சொக்கலிங்கம். |
 |
 |
| வெற்றிப்பெற்றோருக்கு பரிசுகளை வழங்குகின்றனர்
திருமதி. ரேவதி சண்முகம் மற்றும் திருமதி. கலைச்செல்வி சொக்கலிங்கம். |
| |
| பரிசு பெற்ற உணவுகளின் செய்முறைக் குறிப்புகளை இங்கே காணலாம்: |