|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- முதலில் ஒரு லிட்டர் பாலை மட்டும் காய்ச்சவும். எலுமிச்சம்பழத்தை ஒரு கோப்பை தண்ணீரில் பிழிந்து பிறகு தண்ணீரை பாலில் கலக்கவும்.
-
பால் திரிந்து பனீராகும். பாலை ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி பனீரைப் பிரிக்கவும். அந்த துணியை ஒரு கனமான பலகையின் கீழ் சுமார் இரண்டு மணி நேரங்கள் வைத்து, பிறகு எடுத்து தட்டில் கொட்டவும்.
-
அரை கோப்பை சர்க்கரையை மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். பிறகு அரைத்த சர்க்கரையுடன் பனீர் மற்றும் ஏலப்பொடி கலந்து, நன்றாக பிசைந்து உருண்டைகளாக உருட்டவும். சுமார் 20 உருண்டைகள் வருமாறு உருட்டவும்.
-
தேங்காயைத் துருவவும். ஒரு கோப்பை துருவலை அடுப்பில் வைத்து ஒரு கோப்பை சர்க்கரை போட்டு கிளறி கேசரிப்பவுடர் போட்டு சூடாக்கி இறக்கி விடவும்.
-
அதிக நேரம் வைத்து கிளறக்கூடாது. கிளறினால் உதிர் உதிராக வராது.
-
பனீர் உருண்டைகளை இந்த துருவலோடு போட்டு உருட்டி எடுக்கவும். கையினால் மீண்டும் ஒரு முறை உருட்டிக் கொள்ளவும்.
-
உருண்டைகளின் மீது திராட்சை அல்லது செர்ரி பழம் அழுத்தி வைக்கவும்.
-
மீதி இருக்கும் தேங்காயுடன் முந்திரி, கசகசா ஆகியவற்றை ஊற வைத்து அரைத்து எடுக்கவும்.
-
இப்போது மீதி உள்ள பாலை அடுப்பில் வைத்து சுண்ட காய்ச்சவும். அதில் மீதியுள்ள அரை கப் சர்க்கரை மற்றும் அரைத்து வைத்துள்ள முந்திரி தேங்காய் விழுதினைப் போட்டு நிதானமான தீயில் வைத்து காய்ச்சவும்.
-
பிறகு இறக்கி வைத்து ஆறியவுடன் அதில் பனீர் உருண்டைகளைப் போட்டு, ஏலப்பொடி தூவி சிறு சிறு கிண்ணங்களில் வைத்துப் பரிமாறவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|