சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கொத்தமல்லி சாதம்
 
தேவையானவை
அரிசி (மெல்லிய ரகம்) ஒரு கப்
உப்பு தேவையான அளவு
விழுதாக அரைக்க:  
சுத்தம் செய்து நறுக்கின மல்லித் தழை 2 கப்
பச்சை மிளகாய் 5,6 ( ருசிக்குத் தக்க)
புளி சுண்டைக்காய் அளவு
தாளிக்க:  
எண்ணெய் 3 மேசைக்கரண்டி
கடுகு ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு 2 மேசைக் கரண்டி
அலங்கரிக்க:  
வறுத்த வேர்க்கடலை கால் கப்
தேங்காய் துருவல் சிறிதளவு
   
செய்முறை
  • சாதத்தைப் பொலபொலவென்று வடித்து ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.
  • மேலே அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைச் சேர்த்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில், எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து, விழுதை பச்சை வாசனை போக கிளறவும்.
  • பிறகு அதை ஆறின சாதத்தில் கொட்டி, உப்பு சேர்த்துக் கிளறவும்.
  • வறுத்த வேர்க்கடலையும் தேங்காய் துருவலும் மேலே தூவி அலங்கரிக்கவும். கண்கவர் அழகிய பச்சை நிறத்தில், சிவப்பு வேர்க்கடலை, வெள்ளை நிறத்தேங்காய் துருவலுடன் பார்க்க மிக அழகாகவும், உண்ண மிக ருசியாகவும் இருக்கும்.
  • குறிப்பு: உளுத்தம் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, பின் வடிகட்டி, துணியில் பரப்பி வைத்து தாளிக்கும் போது வறுத்தால், மிகக் கரகரப்பாக இருக்கும்.
 
 
பல்சுவைப் பக்கத்திற்குச் செல்ல..
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி