|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|

| எத்தனை நாளைக்குதான் இட்லியை வெறும்
சட்னி, சாம்பாரோட சாப்பிடுவீங்க. ஒருமுறை இப்படி கைமா பண்ணி சாப்பிட்டுப்
பாருங்க. இட்லி உப்புமா மாதிரி தெரிஞ்சாலும், செய்முறை, சேர்க்கப்படும்
பொருட்கள், சுவை இப்படின்னு எல்லாவற்றிலும் இரண்டுக்கும் நிறைய வித்தியாசம்
இருக்கு. என்ன தயாராயிட்டீங்களா? |
 |
| மசாலா கைமா இட்லி |
| |
| தேவையானப் பொருட்கள் |
| இட்லி |
8 |
| மைதா மாவு |
2 கப் |
| மிளகாய்த் தூள் |
2 தேக்கரண்டி |
| ரொட்டித்தூள் |
2 கப் |
| கடுகு |
ஒரு தேக்கரண்டி |
| உளுத்தம்பருப்பு |
ஒரு தேக்கரண்டி |
| கறிவேப்பிலை |
சிறிது |
| சின்ன வெங்காயம் |
அரை கப் (பொடியாக நறுக்கியது) |
| தக்காளி |
2 கப் (பொடியாக நறுக்கியது) |
| பூண்டு |
6 பல் |
| இஞ்சி |
ஒரு சிறுதுண்டு |
| மிளகாய்த்தூள் |
ஒரு தேக்கரண்டி |
| மல்லித்தூள் |
அரைத் தேக்கரண்டி |
| மஞ்சள்தூள் |
அரைத் தேக்கரண்டி |
| கொத்தமல்லித் தழை |
அரை கப் (பொடியாக நறுக்கியது) |
| உப்பு |
தேவையான அளவு |
| எண்ணெய் |
தேவையான அளவு |
| |
|
| செய்முறை |
|
- இஞ்சியையும் பூண்டையும் சேர்த்து மிருதுவாக அரைக்கவும்.
மைதாவில் ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள், தேவையான உப்பு கலந்து,
போதுமான நீரை ஊற்றி தோசை மாவைப் போல் கரைத்துக் கொள்ளவும்.
- இட்லிகளை விரல் நீளத்திற்கு துண்டுகள் செய்து மைதாக் கரைசலில்
அமிழ்த்தி ரொட்டித் தூளில் பிரட்டி சூடான எண்ணெய்யில் பொன்னிறமாகப்
பொரித்து எடுக்கவும்.
- வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு
போட்டு வெடித்ததும், உளுத்தம் பருப்பைப் போடவும்.
- பருப்பு சிவந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம், மஞ்சள்தூள்,
தக்காளியை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.
- அனைத்தும் நன்கு வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள இஞ்சி
பூண்டு விழுதினைச் சேர்த்து சில நிமிடங்களுக்கு வதக்கவும்.
- இப்போது பொரித்து வைத்துள்ள இட்லி துண்டுகளையும், கொத்தமல்லியையும்
சேர்த்து நன்கு கலந்து எல்லாம் ஒன்றாய் சேரும் வரை குறைந்த
தீயில் சில நிமிடங்கள் பிரட்டி எடுக்கவும்.
|
| |
|
| இந்த வார 'டிப்ஸ்' |
| கை விரல்களிலோ, உள்ளங்கால்களிலோ
முள் குத்தி அவை உள்ளே இருந்தால், ஒரு மேசைக்கரண்டி அரிசி ரவாவை,
ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் மற்றும் மஞ்சள் தூளுடன் சிறிது தண்ணீரில்
கலந்து மிதமான தீயில் கெட்டியான கலவையாக காய்ச்சி எடுத்துக்
கொண்டு, இரவில் அதனை முள் குத்திய இடத்தில் வைத்து ஒரு வெள்ளைத்
துணியால் கட்டி வைத்திருந்து மறுநாள் காலை அந்த கட்டைப் பிரித்து
எடுத்து விடவும். இது போல் சில நாட்கள் செய்து வர அந்த முள்
தானாகவே வெளி வந்து விடும். |
| |
|
| திருமதி."மனோ"வின்
இதரப் பக்கங்கள் |
| |
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|