சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

முந்திரி பக்கோடா, வெங்காய பக்கோடான்னு எப்ப பார்த்தாலும் சைவ பக்கோடாவையே சாப்பிடும் அசைவ பிரியர்களுக்கான சிற்றுண்டி இது. சைவர்கள் மன்னிக்கவும். இதை மதிய உணவுக்கு துணை உணவாகச் சேர்த்து சாப்பிடலாம். தக்காளி சாஸ் உடன் மாலை நேரம் சாப்பிட மிகவும் நன்றாய் இருக்கும். புரதச் சத்து, உயிர்ச்சத்து மிகுந்த பக்கோடா இதுவாகத்தான் இருக்கும்.
மீன் பக்கோடா
 
தேவையானப் பொருட்கள்
பொடியாக அரிந்த வெங்காயம் ஒரு கப்
மல்லித்தூள் ஒரு மேசைக்கரண்டி
மிளகாய்த் தூள் 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் அரைத் தேக்கரண்டி
பொடியாக நறுக்கின பச்சை மிளகாய் 2 தேக்கரண்டி
முள் இல்லாத சதைப்பற்றான மீன் துண்டுகள் முக்கால் கிலோ
பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழை அரை கப்
கடலை மாவு ஒரு கப்
முட்டை ஒன்று
தண்ணீர் 7 மேசைக்கரண்டி
மைதா மாவு ஒரு தேக்கரண்டி
சோள மாவு ஒரு தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
   
செய்முறை  
  • எல்லா மாவுகளையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதில் முட்டையை உடைத்து ஊற்றி, ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூள், தேவையான உப்பு, தண்ணீரை ஊற்றிக் கலந்து சுமார் அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி 3 தேக்கரண்டி எண்ணெய் விடவும். அது சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பிறகு மீதியுள்ள தூள்களைச் சேர்த்து சிறிது வதக்கி மீன் துண்டங்களையும் சேர்த்து 5 நிமிடங்கள் குறைந்த தீயில் வேகவிடவும்.
  • பிறகு அடுப்பை அணைத்துவிட்டு, மீன் கலவையை ஆற வைத்து, அத்துடன் கொத்தமல்லித் தழையைச் சேர்த்து நன்கு மசிக்கவும்.
  • இந்த கலவையை கடலை மாவு கரைசலில் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கி, ஒவ்வொரு தேக்கரண்டியாக ஊற்றி, பக்கோடாக்களாக பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
   
இந்த வார 'டிப்ஸ்'
கல் தோட்டில் எண்ணெய் இறங்கி விட்டால், அதை ஒரு வெள்ளைத் துணியில் குப்புற வைத்து, அந்த வெள்ளைத் துணியை ஒரு இட்லிப் பாத்திரத்தில் வைத்து 15 நிமிடங்களுக்கு ஆவியில் வைத்தால், தோட்டில் இறங்கியிருந்த எண்ணெய் முழுவதும் துணியில் இறங்கி விடும்.
 
திருமதி."மனோ"வின் இதரப் பக்கங்கள்
 
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி