|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|

தமிழகத்தில் அதிகம் உண்ணப்படும் சிற்றுண்டி
கண்டிப்பாய் இட்லிதான். சிலருக்கு காலை மாலை இரண்டு வேளையும் இட்லி
வேண்டும். இட்லியை வெறுப்பவர்கள் மிகச் சிலரே. எளிதில் ஜீரணமாகக் கூடிய,
சுவையான மாவு பண்டம் இது. இதனை இப்படி வித்தியாசமாக செய்து, சாப்பிட்டுப்
பாருங்கள். இட்லியை வெறுப்பவர்கூட இதன் சுவைக்கு அடிமையாவது நிச்சயம்.
|
 |
| பால் இட்லி |
| |
| தேவையானப் பொருட்கள் |
| காராமணி |
ஒரு கப் |
| முழுப்பயறு |
ஒரு கப் |
| தேங்காய்த்துருவல் |
ஒரு கப் |
| நெய் |
2 மேசைக்கரண்டி |
| வெல்லப்பொடி |
இரண்டு கப் |
| புளிக்காத இட்லி மாவு |
தேவையான அளவு |
| பால் |
3 அல்லது 4 லிட்டர் |
| ஏலப்பொடி |
2 தேக்கரண்டி |
| |
|
| செய்முறை |
|
- காராமணியையும் பயிறையும் நிறைய தண்ணீரில் முதல் நாள் இரவே
ஊற வைத்துவிடவும்.
- காலையில் தண்ணீரை இறுத்தி, வேறு தண்ணீரில் இரண்டு பயிறையும்
குக்கரில் வேகவைக்கவும்.
- பிறகு இவை இரண்டையும் ஒரு கப் வெல்லம், நெய், தேங்காய்த்துருவலுடன்
சேர்த்து ஒரு வாணலியில் போட்டுக் கிளறி பூரணம் கெட்டியானதும்
ஒரு தேக்கரண்டி ஏலப்பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும்.
- இட்லித்தட்டில் இட்லி மாவை ஒவ்வொரு குழியிலும் பாதி ஊற்றி,
பிறகு பூரணத்தை அதன்மீது வைத்து மறுபடியும் இட்லி மாவால்
அதை மூடவும். இதைப் போல் எல்லா இட்லிகளையும் தயாரித்து வழக்கம்போல்
ஆவியில் வேக விடவும்.
- பாலை பாக்கி வெல்லப்பொடி, ஏலப்பொடி சேர்த்து அது பாதியாக
கெட்டியாகும் அளவு காய்ச்சவும்.
- ஒரு கிண்ணத்தில் ஒரு இட்லி வைத்து அதன் மேலே பாலை அந்த
இட்லி மூழ்கும் வரை ஊற்றி பரிமாறவும்.
|
| |
|
| இந்த வார 'டிப்ஸ்' |
| தயிர் சுவையாக தயாரிக்க;
பாலைக் காய்ச்சிய பின், அது மிதமான சூட்டில் இருக்கும்போது,
ஒரு பாத்திரத்தில் 2 மேசைக்கரண்டி தயிர், அரை தேக்கரண்டி உப்பு,
ஒரு கைப்பிடி கறிவேப்பிலையைப் போட்டு, நன்கு கலந்து, பிறகு பாலை
ஊற்றி, இரு முறை நன்கு நுரை வர ஆற்றி, பிறகு மூடி வைக்கவும். |
| |
|
| திருமதி."மனோ"வின்
இதரப் பக்கங்கள் |
| |
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|