|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|

சூப் வகைகள் எப்போதும் உடலுக்கு ஆரோக்கியமானவை.
நீர் ஆகாரம் என்பதால் செரிமானப் பிரச்சனை கிடையாது. நமது தினசரி உணவில்
ஏதேனும் ஒரு சூப் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. இந்த நெஞ்செலும்பு
சூப் சுவையானது மட்டுமல்ல. ஆரோக்கியமானது. பலவித உடல் பிரச்சனைகளைத்
தீர்க்கும் நல்ல நிவாரணி.
|
 |
| நெஞ்செலும்பு சூப் |
| |
| தேவையானப் பொருட்கள் |
| நெஞ்செலும்பு |
கால் கிலோ |
| சோம்பு |
ஒன்றரை தேக்கரண்டி |
| மிளகாய் வற்றல் |
6 |
| தனியா |
ஒரு தேக்கரண்டி |
| வெங்காயம் பொடியாக அரிந்தது |
ஒரு கப் |
| பொடியாக நறுக்கிய தக்காளி |
ஒரு கப் |
| மிளகு |
அரை தேக்கரண்டி |
| சீரகம் |
ஒன்றரை தேக்கரண்டி |
| கிராம்பு |
2 |
| பட்டை |
2 சிறுதுண்டுகள் |
| துவரம் பருப்பு |
ஒரு தேக்கரண்டி |
| கடுகு |
ஒரு தேக்கரண்டி |
| கறிவேப்பிலை |
ஒரு பிடியளவு |
| எலுமிச்சை சாறு |
ஒரு தேக்கரண்டி |
| மிளகாய்த்தூள் |
அரை தேக்கரண்டி |
| உப்பு |
தேவையான அளவு |
| நல்லெண்ணெய் |
3 மேசைக்கரண்டி |
| |
|
| செய்முறை |
|
- நெஞ்செலும்பை நன்கு கழுவி, அதை ஒரு பாத்திரத்தில் தக்காளி,
வெங்காயம், ஒரு தேக்கரண்டி சோம்பு, ஒரு தேக்கரண்டி சீரகம்,
மிளகாய் வற்றல், தனியா, பட்டை, மஞ்சள் தூள், கிராம்பு, துவரம்
பருப்பு, போதுமான உப்பு ஆகியவற்றுடன் சேர்த்து குக்கரில்
வைத்து நன்கு வேக வைக்கவும்.
- ஒரு சிறு பாத்திரத்தில் எண்ணெய்யை ஊற்றி, அடுப்பில் வைத்து
சூடானதும் கடுகைப் போடவும். அது வெடித்ததும் மீதமுள்ள சோம்பு,
சீரகம், கறிவேப்பிலை சேர்க்கவும்.
- அவை வதங்கியதும் கறி வெந்த நீரை வடிகட்டி ஊற்றவும்.
- ஒரு கொதி வந்ததும் இறக்கி எலுமிச்சை சாறு, கொத்தமல்லித்
தழை சேர்க்கவும்
- வடிகட்டிய பின் தேங்கும் கறித்துண்டுகளை மிளகாய்த் தூளைச்
சேர்த்து நன்கு சுண்டும் வரை சமைக்கவும்.
- இதை தனியாகத் தொட்டுக்கொள்ள வைத்துக் கொள்ளலாம்.
|
| |
|
| இந்த வார 'டிப்ஸ்' |
| தலையில் பொடுகு போக;
ஒரு கை தேங்காய்த் துருவலுடன் 2 மேசைக்கரண்டி கசகசாவை சேர்த்து
நன்கு அரைத்து, சிறிது புளித்த தயிரில் கலந்து, தலையில் தடவி
ஒரு மணி நேரம் ஊற வைத்து பிறகு குளிக்கவும். இதை அடிக்கடி செய்து
வந்தால் தலையில் பொடுகு நீங்கும். |
| |
|
| திருமதி."மனோ"வின்
இதரப் பக்கங்கள் |
| |
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|