சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

பொங்கல் என்றாலே சர்க்கரை பொங்கலும், மிளகு பொங்கலும்தான் உடனடியாக நினைவிற்கு வருபவை. பெரும்பாலான கோயில்களில் பிரசாதமாக இந்த இரண்டும் அல்லது இரண்டில் ஒன்று கண்டிப்பாய் கிடைக்கும். வீடுகளிலும் அதிகபட்சம் இந்த இருவகை பொங்கலையே பெண்கள் செய்கின்றனர். சற்றே வித்தியாசமான சுவையில் ஒரு ஆரோக்கியமான பொங்கல் சாப்பிட வேண்டும் என்று விரும்புவோர் இந்த காரட் பொங்கலை கண்டிப்பாய் முயன்று பார்க்க வேண்டும்.
காரட் பொங்கல்
 
தேவையானப் பொருட்கள்
பச்சரிசி ஒரு கப்
துவரம்பருப்பு அரை கப்
பொடியாக அரிந்த தக்காளி ஒரு கப்
கடுகு ஒரு தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
மிளகாய் வற்றல் 2
புதினா இலைகள் கால் கப்
துருவிய இஞ்சி ஒரு தேக்கரண்டி
காரட் துருவல் 2 கப்
பச்சை பட்டாணி அரை கப்
கெட்டியான தேங்காய்ப் பால் ஒரு கப்
உப்பு தேவையான அளவு
நெய் 2 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் அரை தேக்கரண்டி
   
செய்முறை  
  • அரிசியையும் பருப்பையும் நன்கு கழுவி, தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  • வாணலியில் நெய்யை ஊற்றி அடுப்பில் வைத்து, அது சூடானதும் கடுகைச் சேர்க்கவும்.
  • கடுகு வெடித்ததும் அரிந்த தக்காளியை சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.
  • பிறகு பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், இஞ்சி, புதினாவை நன்கு அரைத்து, சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதன் பின் காரட் துருவல், பட்டாணி, மஞ்சள் தூளைச் சேர்த்து வதக்கவும்.
  • ஊற வைத்துள்ள அரிசி, பருப்பினை நீரை வடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துகொண்டு, அத்துடன் வதக்கின கலவையைச் சேர்த்து, தேவையான உப்பு, நீர், தேங்காய் பால் சேர்த்து கிளறி, குக்கரில் வைத்து வேக வைக்கவும்.
  • அரிசி நன்கு வேகும் வரை வைத்திருந்து (விரும்பினால் சற்றுக் குழைய விட்டு கொள்ளலாம்) பிறகு இறக்கி சூடாகப் பரிமாறவும்.
   
இந்த வார 'டிப்ஸ்'
தயிர் புளித்துப் போய்விட்டால் அதை சரி செய்ய: தயிரின் மீது 2 கப் சுத்தமான நீரை அதை கலக்காமல் அதன் மீது ஊற்றவும். பிறகு, அதை மூடி வைக்கவும். 2 மணி நேரம் கழித்து, மெதுவாக மேலாகவுள்ள நீரை வேறொரு பாத்திரத்தில் கொட்டவும். இப்போது தயிரை சுவைத்துப்பார்த்தால் புளிப்பிருக்காது.
 
திருமதி."மனோ"வின் இதரப் பக்கங்கள்
 
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி