சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

பஜ்ஜி என்றாலே வாழைக்காய், வெங்காயம் அல்லது உருளைக்கிழங்கு இதில் ஏதேனும் ஒரு காயைத்தான் பெரும்பாலும் அனைவரும் பயன்படுத்துகின்றனர். இந்த சுரைக்காய் பஜ்ஜி சற்று வித்தியாசமானது. சுரைக்காயை விரும்பாதவர்கள் கூட, இதே போன்று பஜ்ஜியாக செய்து கொடுக்கும் பட்சத்தில், மிகவும் விரும்பி சாப்பிடுவர். சூடான பஜ்ஜிக்கு சுவையான தேங்காய் சட்னி பொருத்தமான துணை.
சுரைக்காய் பஜ்ஜி
 
தேவையானப் பொருட்கள்
சுரைக்காய் நடுத்தரமான காயில் பாதி
சோடா உப்பு ஒரு சிட்டிகை
பெரிய வெங்காயம் ஒன்று
பச்சைமிளகாய் 2
துருவிய இஞ்சி ஒரு தேக்கரண்டி
சூடான எண்ணெய் 2 தேக்கரண்டி
மைதா மாவு ஒரு கப்
சோள மாவு அரை கப்
உப்பு தேவையான அளவு
கெட்டியான தேங்காய்ப் பால் ஒரு கப்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் பொரிப்பதற்கு
   
செய்முறை  
  • சுரைக்காயைத் தோல் சீவி, விரல் நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • நறுக்கின துண்டங்களுடன் சோடா உப்பும், தேவையான உப்பும் சேர்த்துப் பிசறி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  • வெங்காயத்தை இஞ்சி, பச்சை மிளகாயுடன் சேர்த்து அரைத்து, மைதா மாவு, சோளமாவு இவற்றுடன் கலந்து, சூடான எண்ணெய்யையும் ஊற்றி, தேவையான உப்பும் சேர்த்து கெட்டியான கரைசலாக கரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய விடவும்.
  • எண்ணெய் சூடானதும், சுரைக்காய் துண்டுகளைப் பிழிந்தெடுத்து, சிறிது சிறிதாக மைதா மாவு கரைசலில் தோய்த்து எடுத்து, எண்ணெய்யில் இட்டுப் பொரித்து எடுக்கவும்.
   
இந்த வார 'டிப்ஸ்'
சமையல் செய்யும் போது, எப்போதும் எண்ணெய்யை நடுத்தரமான தீயில் சூடாக்கி, தாளித்தல், பொரித்தல், வதக்குதல் போன்றவற்றை செய்ய வேண்டும். அதிக தீயில் வைத்து சூடாக்கினால் அதிலுள்ள, நமது உடலுக்குத்ட் தேவையான அமினோ ஆஸிட் ஆவியாகி விடுகின்றது.
 
திருமதி."மனோ"வின் இதரப் பக்கங்கள்
 
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி