சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

தென்னிந்திய உணவுகளில் கேரள வகை உணவுகளுக்கு தனிச் சிறப்பிடம் உண்டு. தேங்காய் அதிகம் விளையும் மாநிலம் என்பதால், பெரும்பாலான உணவுகளில் தேங்காய் சம்பந்தப்பட்ட பொருட்கள் இருக்கும். பொதுவாக தேங்காய் அதிகம் சேர்க்கப்படும் உணவுகளில், காரம் சற்று குறைவாகவே இருக்கும். இந்த மலபார் கோழிக்கறியும் அந்த வகையைச் சேர்ந்ததுதான்.
மலபார் கோழிக்கறி
 
தேவையானப் பொருட்கள்
கோழி ஒரு கிலோ
மிளகாய்வற்றல் 12
தேங்காய் ஒரு மூடி துருவியது
பூண்டு 10 பற்கள்
சின்ன வெங்காயம் ஒரு கையளவு
மிளகு ஒரு தேக்கரண்டி
சோம்பு ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா அரை தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
வெங்காயம் அரை கப் பொடியாக நறுக்கியது
கடுகு ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
எண்ணெய் தேவையான அளவு
   
செய்முறை  
  • கோழியைக் கழுவி சுத்தம் செய்து கொண்டு, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி 3 மேசைக்கரண்டி எண்ணெய் விடவும்.
  • சோம்பு, மிளகு, மிளகாய் வற்றல் சேர்த்து சில கணங்கள் வதக்கி பிறகு தேங்காய்த்துருவல், பூண்டு, மசாலாத் தூள்கள், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • எல்லாம் சேர்ந்து, பொன்னிறமாக வதங்கியதும் வெளியே எடுத்து ஆறவைக்கவும். பிறகு வறுத்தவற்றை நன்கு அரைக்கவும்.
  • மறுபடியும் வாணலியில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, நறுக்கின கோழித் துண்டங்களை சேர்த்து சிறிது வதக்கி பிறகு அரைத்த கலவையை மஞ்சள் தூள், உப்புடன் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
  • கறி வெந்து மசாலா கெட்டியானதும் தனியாக ஒரு சிறிய வாணலியில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
  • மேலும் சில நிமிடங்கள் கோழியை வேக வைத்து இறக்கவும்.
   
இந்த வார 'டிப்ஸ்'
கண்ணாடி டம்ளர்கள் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து எடுக்க வராவிட்டால், கீழ் டம்ளரை கொதிநீரில் வைத்து, மேலுள்ள டம்ளரில் மிகக்குளிர்ந்த நீர் ஊற்றி சிறிது நேரத்தில் மேல் டம்ளரை இழுத்தால் எளிதாக வந்துவிடும்.
 
திருமதி."மனோ"வின் இதரப் பக்கங்கள்
 
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி