|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|

| நெல்லியை காய், கனி என்று பிரிப்பது
கடினம். முற்றின நெல்லியை வேண்டுமானால் நெல்லிக் கனி என்று சொல்லலாம்.
நன்கு முற்றிய நெல்லிக்காய் ஊறுகாய் போடச் சிறந்தது. பிஞ்சில் துவர்ப்புச்
சுவை அதிகம் இருக்கும். நீண்ட ஆயுளுக்கு நெல்லிக்கனி என்பது வழக்கில்
உள்ள சொல். உண்மைதான். இது ஏராளமான மருத்துவ குணங்களைத் தன்னுள்ளே
கொண்டுள்ளது. இதனுடன் இஞ்சி சேர்த்துச் செய்யப்படும் இந்த ஊறுகாய்,
உண்மையிலேயே உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது. |
 |
| பச்சை நெல்லிக்காய் ஊறுகாய் |
| |
| தேவையானப் பொருட்கள் |
| நெல்லிக்காய் |
ஒரு கிலோ |
| இஞ்சி |
2 மேசைக்கரண்டி (துருவியது) |
| மிளகாய் |
2 மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது) |
| உப்பு |
தேவையான அளவு |
| |
|
| செய்முறை |
|
- நெல்லிக்காய்களை ஒரு நாள் வெய்யிலில் காயவைக்கவும்.
- பிறகு குழவியால் தட்டினால் சதை தனியாகவும் கொட்டை தனியாகவும்
கழன்று விடும். இது போல எல்லா நெல்லிக்காய்களையும் கொட்டைகளை
நீக்கி சதையை எடுக்கவும்.
- பிறகு அவற்றை அம்மியில் வைத்து இடித்தெடுத்து ஒரு ஜாடியில்
போட்டு அவை மூழ்கும் அளவுக்கு சுத்தமான காய்ச்சி ஆற வைத்த
தண்ணீரை விட்டு, தேவையான உப்பும் சேர்த்துக் கிளறி மூடி
வைக்கவும்.
- தினமும் காலையிலும் மாலையிலும் ஜாடியைத் திறந்து, கரண்டியால்
கலக்கி விடவும். இரண்டு மூன்று நாட்களில் நன்கு மசிந்து
துவையல் போலாகி விடும்.
- அப்போது இரண்டு மேசைக்கரண்டி துருவிய இஞ்சியும், இரண்டு
மேசைக்கரண்டி மிகவும் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாயையும்
சேர்க்கவும்.
- இரண்டு நாட்கள் மெல்லிய வெள்ளைத்துணியால் வேடு கட்டி வெயிலில்
காய வைத்து பின்னர் இதனை உபயோகிக்கலாம்.
|
| |
|
| இந்த வார 'டிப்ஸ்' |
| புத்தக பீரோவில் புகையிலைத்
துண்டுகளைப் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது. |
| |
|
| திருமதி."மனோ"வின்
இதரப் பக்கங்கள் |
| |
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|