சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

எப்போதுமே தேங்காய் சட்னி, வெங்காயச் சட்னியா? வேண்டாமே. அவ்வபோது இந்த பீர்க்கங்காய் சட்னியையும் முயன்று பாருங்கள். செய்வதற்கு எளிதானது. சத்தானது. வித்தியாசமான சுவையுடையது. வேறு என்ன வேண்டும்? இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள மட்டுமல்ல. சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும் இது மிகவும் சுவையாய் இருக்கும்.
பீர்க்கங்காய் சட்னி
 
தேவையானப் பொருட்கள்
பீர்க்கங்காய் இரண்டரை கப் சிறிய துண்டுகளாக நறுக்கியது
பச்சைமிளகாய் 6
கடலைப்பருப்பு 2 மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு 2 மேசைக்கரண்டி
தேங்காய் ஒரு கப் துருவியது
கொத்தமல்லி இலை ஒரு கப்
எண்ணெய் 2 மேசைக்கரண்டி
புளி அரை நெல்லிக்காய் அளவு
உப்பு தேவையான அளவு
   
செய்முறை  
  • எண்ணெயை சூடாக்கி பச்சைமிளகாய்கள், பீர்க்கங்காயை போட்டு வதக்கவும்.
  • ஓரளவு நன்கு வதங்கியதும் தேங்காய்த்துருவலையும் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  • தனியாக சிறிது எண்ணெயில் கடலைப்பருப்பையும், உளுத்தம்பருப்பையும் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
  • அனைத்துப் பொருட்களுடன் கொத்தமல்லி இலை, புளி, தேவையான உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுக்கவும்.
   
இந்த வார 'டிப்ஸ்'
மஞ்சளை உரைத்து, அதே அளவு சுண்ணாம்பு கலந்து, நன்கு குழைத்து, இரவில் கால் வெடிப்புகளில் பூசி வந்தால், சில தினங்களில் பித்த வெடிப்பு மறைந்து விடும்.
 
திருமதி."மனோ"வின் இதரப் பக்கங்கள்
 
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி