சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

மழைக்காலத்திற்கு ஏற்ற மாலை நேர சிற்றுண்டி இது. கடைகளில் கிடைப்பதுபோல் அல்லாமல், இது சற்று வித்தியாசமான முறையில் செய்யப்படும் முட்டை பஜ்ஜி. கொஞ்சம் பொறுமை தேவை. இதன் பலனாக, சுவை அபாரமாய் இருக்கும்.
முட்டை பஜ்ஜி
 
தேவையானப் பொருட்கள்
முட்டைகள் 8
வெங்காயம் 2 பொடியாக அரிந்து கொள்ளவும்
பச்சைமிளகாய் ஒரு தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
இஞ்சி விழுது அரை தேக்கரண்டி
பூண்டு விழுது அரை தேக்கரண்டி
கொத்தமல்லி இலை ஒரு தேக்கரண்டி பொடியாக அரிந்தது
கடலை மாவு 2 கப்
மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் 5
பூண்டு 5 பற்கள்
சோம்பு ஒரு தேக்கரண்டி
புதினா இலை ஒரு மேசைக்கரண்டி பொடியாக அரிந்தது
உப்பு தேவையான அளவு
   
செய்முறை  
  • முட்டைகளை வேக வைத்து எடுத்து மேல் ஓட்டினை நீக்கி இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அவற்றின் மஞ்சள் கருக்களை கவனமாக, வெள்ளைக் கரு உடையாமல் எடுத்து பொடியாக நறுக்கவும்.
  • பொடியாக அரிந்த வெங்காயம், பச்சைமிளகாய், அரைத்த விழுதுகள், கொத்தமல்லி இலை அனைத்தும் தேவையான உப்புடன் கலந்து மறுபடியும் ஒரு தேக்கரண்டி உதவியால் வெள்ளைக்கருக்களின் குழிகளில் நிரப்பவும்.
  • சோம்பு, சின்ன வெங்காயம், பூண்டு இவை மூன்றையும் நன்கு அரைத்து கடலைமாவு, மிளகாய்த்தூள், புதினா இலை அனைத்துடனுடனும் தேவையான உப்பு சேர்த்து கலந்து கெட்டியான கரைசலைத் தயாரிக்கவும்.
  • எண்ணெயை சூடாக்கி தயாரித்து வைத்த முட்டைகளை ஒவ்வொன்றாக கரைசலில் கவனமாக அமிழ்த்தி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
   
இந்த வார 'டிப்ஸ்'
வேப்பங்கொட்டைகளை சிறு மூட்டைகளாகக் கட்டி, அரிசி, கோதுமை டின்களில் போட்டு வைத்தால் புழு, பூச்சிகள் வராது.
 
திருமதி."மனோ"வின் இதரப் பக்கங்கள்
 
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி