சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

எப்போதும் அரிசி பிரியாணியையே சாப்பிடுபவர்களுக்கு இது ஒரு மாறுதலாய் இருக்கும். சுவையானது.
இடியாப்ப பிரியாணி
இடியாப்பம் செய்யும் முறை:
தேவையானப் பொருட்கள்
அரிசி மாவு 2 கப் வறுத்தது
தேங்காய் எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
தேங்காய் துருவியது ஒரு மூடி
தேங்காய்ப் பால் அரை கப்
உப்பு தேவையான அளவு
சுடுநீர் தேவையான அளவு
   
செய்முறை
  • அரிசி மாவில் உப்பு, தேங்காய் எண்ணெய் கலந்து சுடுநீர் தேவையான அளவு கலந்து பதமான இடியாப்ப மாவுக்கலவை தயாரித்து, இடியாப்ப உரல் மூலம் பிழிந்து தயாரித்துக் கொள்ளவும்.
  • இடியாப்பங்கள் ஆறியதும் தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்து வைக்கவும்.
   

பிரியாணி செய்யும் முறை:
 
தேவையானப் பொருட்கள்  
ஆட்டுக்கறி கால் கிலோ இளசான துண்டுகள்
வினிகர் ஒரு மேசைக்கரண்டி
மிளகுத்தூள் ஒரு தேக்கரண்டி
இஞ்சி=துருவல் 2 மேசைக்கரண்டி
பூண்டு 10 பல்
எண்ணெய் 2 மேசைக்கரண்டி
தேங்காய்ப்பால் அரை கப்
மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி
பட்டைத்தூள் ஒரு தேக்கரண்டி
சோம்புத்தூள் ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கை பிடி
உருளைக்கிழங்கு கால் கிலோ
காரட் 125 கிராம்
வெண்ணெய் அரை கப் அல்லது நெய்
வெங்காயம் ஒன்றரை கப்(நீளமாக அரிந்தது)
தக்காளி ஒரு கப்(பொடியாக அரிந்தது)
கொத்தமல்லித்தழை அரை கப்(பொடியாக அரிந்தது)
மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
   
செய்முறை  
  • கறித்துண்டங்களில் வினிகர், மிளகுத்தூளைக் கலக்கவும். இஞ்சித் துருவலையும், பூண்டுகளையும் மையாக அரைத்து அதில் பாதியை கறித்துண்டுகளில் தேவையான உப்புடன் கலந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும். ஊறவைத்த கறித்துண்டங்களைப் போட்டு அவை வேகும் வரை சிறு தீயில் வதக்கவும்.
  • பிறகு தேங்காய்ப் பால், மிளகாய்த்தூள், சோம்புத்தூள், பட்டைத்தூள், கறிவேப்பிலை கலந்து நீர் சுண்டும் வரை சமைக்கவும்.
  • உருளைக்கிழங்குகளையும், காரட்டுக்களையும் மெல்லியதாக துண்டுகள் செய்து சூடான எண்ணெயில் சிவக்காது பொரித்து எடுக்கவும்.
  • அடுப்பில் ஒரு அகன்ற பெரிய வாணலியை வைத்து நெய்யை ஊற்றி சூடாக்கவும். அதில் அரிந்த தக்காளி, வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பிறகு மீதமுள்ள இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள்தூளைச் சேர்த்துக் குழைய வதக்கவும். கறித்துண்டுகளையும், காரட்டையும் சேர்த்து வதக்கவும்.
  • இறுதியில் உருளைக்கிழங்கையும் சேர்த்து போதிய அளவு உப்பும் சேர்த்து எல்லாம் சேர்ந்து வரும் வரை நன்கு வதக்கவும்.
  • பிறகு இடியாப்பங்களை கலந்து சில நிமிடங்கள் கிளறவும். கொத்தமல்லியைத்தூவி பரிமாறவும்.
   
இந்த வார 'டிப்ஸ்'
ஜுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முதன் முதலாக தலைகுளிக்கும் போது ஒரு கரண்டி ஓமத்தை மையாக அரைத்து தலையில் தேய்த்து பிறகு குளித்தால் தலைக்குள் நீர் இறங்காது.
 
திருமதி."மனோ"வின் இதரப் பக்கங்கள்
 
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி