சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

இனிப்பும் புளிப்பும் கலந்த இந்த ஊறுகாயின் சுவையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. உங்கள் நா உணரட்டும் இச்சுவையை. இன்றே செய்து பாருங்கள்.
கடாரங்காய் இனிப்பு ஊறுகாய்
 
தேவையானப் பொருட்கள்
கடாரங்காய் பெரியது 3 (மஞ்சள் நிறமானவை)
மிளகாய்த்தூள் 6 மேசைக்கரண்டி
வெந்தயம் 2 தேக்கரண்டி
பெருங்காயம் சிறு அரைநெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெய் ஒன்றரை கப்
வெல்லம் 3 கப்
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி
   
செய்முறை  
  • காய்களை நன்கு கழுவி பின் ஈரமின்றி துடைத்து, சிறு சிறு துண்டங்களாக நறுக்கி விதைகள் அனைத்தையும் நீக்கவும்.
  • ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணையில் பாதியை ஊற்றி சூடாக்கவும்.
  • குறைந்ததீயில் கடாரங்காய்த் துண்டுகளைச் சேர்த்து நன்கு வதக்கவும். பாதி வெந்து, காய்கள் குழைந்ததும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  • கடாரங்காய்களின் புளிப்புத்தன்மைக்கு ஏற்ப மிளகாய்த்தூளை கூட்டவோ, குறைக்கவோ வேண்டும்.
  • சிறிது சிறிதாக மீதமுள்ள எண்ணெயையும் சேர்த்து வதக்கவும்.
  • வெந்தயத்தையும் பெருங்காயத்தையும் சிறிது எண்ணெயில் பொன்னிறமாக வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்.
  • காய்கள் நன்கு குழைந்ததும் சரியான அளவு உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி, பிறகு வெல்லத்தூள் சேர்த்து வதக்கவும்.
  • எல்லாம் சேர்ந்து, எண்ணை மிதக்கும் போது வெந்தய, பெருங்காயப் பொடிகளைத் தூவி கலந்து இறக்கவும்.
   
இந்த வார 'டிப்ஸ்'
ஒற்றைத் தலைவலியால் அல்லது கடுமையான தலைவலியால் அவதியுறும் போது கடுகை மையாக அரைத்து இரு பாதங்களிலும் பற்று போட்டால் சிறிது நேரத்தில் தலைவலி மறைந்து விடும்.
 
திருமதி."மனோ"வின் இதரப் பக்கங்கள்
 
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி