சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

மழைக் காலங்களில் சூடாக ஏதேனும் ஒன்றைக் கொறித்துக் கொண்டிருப்பது சுகமோ சுகம். அதுவும் நாவை வருத்தாத இதமான காரமாக இருக்கும்பட்சத்தில் சுவை இரட்டிப்பாகின்றது. அந்த வகையைச் சேர்ந்ததுதான் இந்த 'குணுக்கு'. மழைக்காலத்திற்காக காத்திருக்க வேண்டாம். சாதாரண மாலைப் பொழுதே இதற்கு போதும். செய்வதற்கு தயாராகிவிட்டீர்களா?
குணுக்கு
 
தேவையானப் பொருட்கள்
புழுங்கல் அரிசி ஒரு கப்
கடலைப்பருப்பு ஒரு கப்
துவரம் பருப்பு ஒரு கப்
உளுத்தம் பருப்பு ஒரு கப்
வெங்காயம் 4
பச்சை மிளகாய் 4
மிளகாய் வற்றல் 4
பெருங்காயப் பவுடர் அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கை பிடி
கொத்தமல்லித்தழை அரை கப்(பொடியாக அரிந்தது)
எண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
   
செய்முறை  
  • அரிசி வகைகளையும், பருப்பு வகைகளையும் தனித்தனியே போதுமான நீரில் 3 மணிநேரம் ஊறவைக்கவும்.
  • பிறகு அரிசி மூழ்கியுள்ள நீரை இறுத்து வற்றல் மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்து மசிய அரைக்கவும்.
  • பின் பருப்புக்களை சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து ஒன்று பாதியாக அரைத்தெடுக்கவும்.
  • வெங்காயங்களை மெல்லியதாக, நீளமாக அரிந்து இந்த மாவில் கொத்தமல்லி, கறிவேப்பிலையுடன் சேர்த்துக் கலக்கவும்.
  • எண்ணையை வாணலியில் ஊற்றி சுடவைக்கவும்.
  • மாவை சிறுசிறு துணுக்குகளாய் எண்ணெய் கொள்ளும் வரை போட்டு பக்கோடா போல பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
   
இந்த வார 'டிப்ஸ்'
தொடர்ந்த வயிற்றுப்போக்கு சீதபேதியால் அவதியுறும் போது ஒரு டம்ளர் தேயிலை டிகாஷனில் 2 கரண்டி சீனி, ஒரு சிறு எலுமிச்சம்பழச்சாறு கலந்து குடித்தால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
 
திருமதி."மனோ"வின் இதரப் பக்கங்கள்
 
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி