|
பழங்கள்
உயிர்ச்சத்துகளின் (vitamins)
முக்கிய ஆதாரமாக
உள்ளது. கொய்யா,
நெல்லிக்காய்
போன்றவைகளில்
வைட்டமின் C
சத்து செறிந்துள்ளது.
வாழைப்பழங்களில்
கார்ப்போஹைட்ரேட்கள்
மிக அதிக அளவில்
உள்ளன. இவை உடலுக்கு
உடனடி சக்தியை
அளிக்கவல்லது.
உலர்ந்த பழங்களில்
இரும்புச்சத்து
நிறைந்து
காணப்படுகின்றது.
பொதுவாக, பழங்கள்
அப்படியே
உட்கொள்ளப்படுவதால்
அவற்றின் சத்துக்கள்
அதிக விரயம்
ஆகாமல், பெரும்பான்மையான
அளவிற்கு நமக்கு
கிடைக்கின்றன.
|