சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கேரள நண்டு மசாலா

நண்டு 8
உலர் மிளகாய் 2
பச்சைமிளகாய் 2
வெங்காயம் ஒரு கப்
இஞ்சி விழுது 3 மேசைக்கரண்டி
பூண்டு விழுது 3 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் அரைத்தேக்கரண்டி
மஞ்சள்தூள் அரைத்தேக்கரண்டி
தக்காளி 2 கப் (நறுக்கியது)
கடுகு அரைத்தேக்கரண்டி
எண்ணெய் 100 மி.லி.
தேங்காய்த்துருவல் ஒரு கப்
கறிவேப்பிலை சிறிது
கொத்தமல்லித்தழை சிறிது
உப்பு தேவையான அளவு

  • நண்டின் பின்புற ஓடு மற்றும் தேவையற்ற பகுதிகளை நீக்கிவிட்டு ஓடும் தண்ணீரில் நன்கு அலசி, இரண்டாக உடைத்து வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் கழுவி சிறியத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கறிவேப்பிலையையும், கொத்தமல்லியையும் கழுவி, கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கவும்.
  • பச்சை மிளகாயின் காம்புகளை நீக்கி, நறுக்கி, தேங்காய்த்துருவலுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். அரைக்கும் போது தேங்காய்த்தண்ணீரைச் சேர்த்து அரைக்கவும்.
  • சற்று பெரிய வாணலியாக எடுத்துக் கொண்டு, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு தாளிக்கவும்.
  • கடுகு வெடித்தவுடன் காய்ந்த மிளகாயினைப் போட்டு ஐந்து விநாடிகள் வதக்கி அத்துடன் இஞ்சி, பூண்டு விழுதினையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • விழுதுகளின் நீர் ஆவியாகும் வரை வதக்கி, அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்.
  • பிறகு தக்காளியைப் போட்டு, அடிப் பிடிக்காமல் இருக்க சிறிது தண்ணீர் ஊற்றி, தீயின் அளவைக் கூட்டி நன்கு வதக்கவும்.
  • எண்ணெய் விடும் வரை வதக்கவும். அதன் பின் தீயின் அளவைக் குறைத்து தேங்காய் விழுதினைச் சேர்க்கவும்.
  • சுமார் இரண்டு நிமிடங்கள் புரட்டிய பின் நண்டுகளையும், கறிவேப்பிலையையும் போட்டு, ஒன்றரை கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
  • தீயின் அளவைக் குறைத்துக் கொள்ளவும். அவ்வபோது கிளறிவிட்டு சுமார் 20 நிமிடங்கள் வேகவிடவும்.
  • நன்கு வெந்ததும் இறக்கி கொத்தமல்லித்தழையினைத் தூவி பரிமாறவும்.
கால அளவு 40 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் திருமதி. ஜீவா மோகன்தாஸ், சென்னை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி