சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கத்தரிக்காய் குழம்பு

கத்தரிக்காய் கால் கிலோ
சிறிய வெங்காயம் 15
மிளகாய் வற்றல் 4
சீரகம் 3 தேக்கரண்டி
மல்லி 1 தேக்கரண்டி
தேங்காய் ஒரு கீற்று
புளி சிறு எலுமிச்சை அளவு
கடுகு அரைத் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி அரைத் தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிது
எண்ணெய் 4 மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு

  • கத்தரிக்காய்களை சிறுசிறு துண்டுகளாய் நறுக்கிக் கொள்ளவும்.
  • மிளகாய் வற்றல், சீரகம், மல்லி மற்றும் தேங்காய் கீற்றினை ஒன்றாய் அரைத்துக் கொள்ளவும்.
  • புளியை சற்று ஊற வைத்து, கரைத்து எடுத்துக் கொள்ளவும். அந்த புளித் தண்ணீரில் அரைத்த மசாலாவினையும், சிறிது மஞ்சத்தூள் மற்றும் தேவையான உப்பு போட்டுக் கரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு போட்டுத் தாளித்து, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
  • அதனுடன் நறுக்கிய கத்தரிக்காய்களையும் போட்டு, புளித் தண்ணீரில் கரைத்த மசாலாவினையும் ஊற்றி கொதிக்க விடவும்.
  • குழம்பு நன்றாக கொதித்து கெட்டியானவுடன் லேசானத் தீயில் வைத்து எண்ணெய் தெளிந்தவுடன் இறக்கவும்.
  • இதே முறையில் கத்தரிக்காய்க்கு பதிலாக பாகற்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய், வாழைக்காய், சுண்டைக்காய், பீன்ஸ் இப்படி ஏதேனும் ஒரு காய் அல்லது இரண்டு காய்களைக் கொண்டும் குழம்பு தயாரிக்கலாம்.
கால அளவு 30-40 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 5 நபர்களுக்கு
வழங்கியவர் திருமதி. ரேவதி ஆனந்த், சென்னை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி