|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|

| நாகை நகரில் பல ஆண்டுகளாக, உணவுத்
துறையில் மட்டுமல்லாது, பல்வேறுத் தொழில் துறைகளிலும் காலடிப்பதித்து,
வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் உமா நிறுவனங்கள் குறித்து ஒரு
சிறிய அறிமுகம். |
| உமா நிறுவனங்களின் அதிபர், டாக்டர்.
P.N. குப்புசாமி அவர்கள் நாகை நகரின் முக்கிய பிரமுகர். பல்வேறு அமைப்புகளில்
பொறுப்புகள் வகிப்பவர். அவரது எளிமை, கனிவானப் பேச்சு, எவ்வித பாகுபாடும்
இல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் பழகும் குணம், இவையனைத்தும்
நகர மக்கள் மனதிலே அவரைப் பற்றின ஒரு உயர்ந்த எண்ணத்தை உருவாக்கியுள்ளது.
அவரது நிறுவனங்களின் வெற்றிக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். பொது
வாழ்க்கை, தொழில், குடும்பம் என்று அனைத்திலும் இறங்கி பம்பரமாய் சுழன்று
கொண்டிருக்கும் இவருக்குப் பக்கத்துணையாய் இருந்து உதவுவது இவரது குடும்ப
உறுப்பினர்கள். |
 |
தந்தைக்குத் துணையாய் தொழிலில் இறங்கி, இன்று
அவரைப் போலவே பெயர் பெற்றுள்ள அவரின் இரண்டு மகன்கள், மூத்தவர் திரு.
K. ரமேஷ், இளையவர் திரு.K. ராஜேஷ், உமா பேக்கரி நிறுவனத்தை வெற்றிகரமாக
நடத்திக் கொண்டு வருகின்றார்கள்.
உமா பேக்கரி விற்பனை மற்றும் மேலாண்மைப் பிரிவில்
திறம்பட செயலாற்றி வரும் திரு. ரமேஷ் அவர்கள், அடிப்படையில் சட்டம்
பயின்றவர். விற்பனையில் பல யுக்திகளையும் புகுத்தி, நகரின் முதன்மையான
பேக்கரி என்ற பெயரைத் தக்க வைத்துக் கொள்ள காரணமாயிருப்பவர்.
|
 |
| தயாரிப்பு பிரிவில், தானும் ஒரு தொழிலாளராய் இருந்து
செயல் ஆற்றிவரும் திரு. ராஜேஷ் அவர்களுக்கு, பேக்கரித் தொழிலின் நுட்பங்கள்
அனைத்தும் அத்துப்படி. இவரிடம் தொழில் பயின்ற பலர் இன்று பல்வேறு நாடுகளில்
பணியாற்றுகின்றனர். புதுப்புது கேக் மற்றும் பிஸ்கட் வகைகளைத் தேடிக்
கண்டறிந்து, அவற்றை வாடிக்கையாளர்கள் விரும்பும் வண்ணம் தேவையான மாற்றங்கள்
செய்து, துணிந்து வெளியிட்டு வெற்றி காண்கின்றார். ஏராளமான பயிற்சி
வகுப்புகள் மற்றும் சொந்த அனுபங்களின் மூலம் இத்தொழில் குறித்த நிறைந்த
அறிவினைப் பெற்றிருந்தாலும், இன்றும் தான் ஒரு கற்றுக் கொள்ளும் மாணவன்
என்று அடக்கத்துடன் தெரிவிகின்றார். இந்த பண்புதான் இவர்களின் வெற்றிக்கு
பெரிதும் காரணம். |
 |
| |
|
| இதர நட்சத்திரங்கள் பக்கத்திற்கு செல்ல.. |
|
| |
|
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|