சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

சிக்கன் சாட்டே

கோழி மார்புத்துண்டுகள் 4
எலுமிச்சை சாறு 2 மேசைக்கரண்டி
சோயா சாஸ் 2 மேசைக்கரண்டி
எண்ணெய் 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
நிலக்கடலை அரை கப் (வறுத்தது)
வெங்காயம் ஒன்று (சிறியது)
பூண்டு 4 பல்
தக்காளி விழுது 3 மேசைக்கரண்டி
தேன் 2 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு

  • கோழி மார்புத் துண்டங்களின் மேல் உள்ள தோலினை நீக்கி, நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
  • பிறகு அரை அங்குல அகலத்திற்கு, நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அவற்றை ஒரு சப்பாத்தி உருட்டுக் கட்டை கொண்டு தட்டையாக்கிக் கொள்ளவும்.
  • எலுமிச்சை சாற்றுடன் ஒரு மேசைக்கரண்டி சோயா சாஸ், ஒரு தேக்கரண்டி எண்ணெய், ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள், தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கி, அதில் சிக்கன் துண்டுகளை பிரட்டி சுமார் ஒரு மணி நேரத்திற்கு குளிர் சாதனப் பெட்டியில் வைத்து ஊற விடவும்.
  • நன்கு ஊறிய பிறகு இறைச்சியினை எடுத்து சம அளவுகளாகப் பிரித்துக் கொண்டு, முக்கால் அடி நீளமுள்ள சொருகு கம்பிகளில், அதனை சொருகி நன்கு முறுக்கி கம்பியை சுற்றி பூசினாற் போல் செய்யவும்.
  • ஒரு வளவளப்பான தோசைக் கல்லை எடுத்துக் கொண்டு அதில் ஒரு சில துளிகள் எண்ணெய் விட்டு, அதன் மீது இறைச்சி சொருகிய கம்பிகளை வைத்து வேகவிடவும்.
  • தீயை சற்று அதிகம் வைத்துக் கொண்டு இறைச்சியின் எல்லா பக்கமும் வேகுமாறு அவ்வபோது எடுத்து திருப்பி வைக்கவும். சுமார் 4 நிமிடங்கள் இவ்வாறு வேக வைக்கவும். ஒவனில் வைப்பதாக இருந்தால் சுமார் 10 நிமிடங்கள் வைக்கவும்.
  • இதற்கான சாஸ் தயாரிக்க, வறுத்த நிலக்கடலை தூளாக அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை தோலுரித்து துருவி எடுத்துக் கொள்ளவும். பூண்டினை தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • தீயை சற்று அதிகம் வைத்துக் கொண்டு, சுமார் அரை நிமிடத்திற்கு விடாது கிளறிய வண்ணம் வேகவிடவும்.
  • அதன் பிறகு மிளகாய்த்தூள், ஒரு மேசைக்கரண்டி சோயா சாஸ், தக்காளி விழுது, தேன், மாவாக்கிய நிலக்கடலை, உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கிளறி கொதிக்க விடவும்.
  • எல்லாம் வெந்து கொதிக்க ஆரம்பித்தவுடன் தீயைக் குறைத்து சுமார் 5 நிமிடங்கள் வைத்து இருக்கவும். அவ்வபோது கிளறி விடவும்.
  • வேகவைத்து எடுத்து கோழித் துண்டங்களுடன் இந்த சாஸினை சேர்த்துப் பரிமாறவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி