சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

சிக்கன் ஷெரின்

கோழி ஒன்று (நடுத்தரமானது)
நெய் கால் கப்
சிக்கன் ஸ்டாக் 2 கப்
அன்னாசி ஒரு துண்டு
சோயா சாஸ் 2 மேசைக்கரண்டி
மிளகுத்தூள் அரைத்தேக்கரண்டி
சோளமாவு 2 மேசைக்கரண்டி
பூண்டு 6 பல்
இஞ்சி அரை அங்குலத்துண்டு
பிஸ்தா சிறிது அலங்கரிக்க
பாதாம் சிறிது அலங்கரிக்க
உப்பு தேவையான அளவு

  • இஞ்சி பூண்டினை தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும். அன்னாசியையும் ஒரு அங்குலத் துண்டுகளாக நறுக்கவும்.
  • கோழிக்கறியினை சுத்தம் செய்து, எலும்புகள் நீக்கி நீளவாக்கில் துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
  • சிக்கன் ஸ்டாக் தயாரிக்க, கோழி எலும்புகள், நறுக்கின வெங்காயம் சிறிது, ஒரு தேக்கரண்டி மிளகுத்தூள், எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி, சிறிது உப்பு, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் மிதமான தீயில் வேக வைத்து, பிறகு நீரினை தனியே வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • எலும்பு நீக்கி துண்டுக்களாக்கி வைத்துள்ள கோழிக்கறியினை தனியே குக்கரில் கால் மணி நேரம் போதுமான நீர் ஊற்றி வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். தேவையெனில் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  • வாணலியில் நெய் விட்டு சூடேறியதும் கோழித்துண்டங்களைப் போட்டு பொன்னிறமாக வேகவைத்து எடுத்து தனியே ஒரு தட்டில் வைக்கவும்.
  • பிறகு அதே நெய்யில் நறுக்கின பூண்டு, இஞ்சியினைச் சேர்த்து நன்கு வதக்கி எடுத்து வைத்துள்ள சிக்கன் மீது ஊற்றவும்.
  • மீண்டும் வாணலியில் சிக்கன் ஸ்டாக்கினை ஊற்றி வேகவைக்கவும். அத்துடன் தேவையான உப்பு, மிளகுத்தூள், சோளமாவு சேர்த்து நன்கு விடாது கலக்கி குழம்பு கெட்டியாக வரும் வரை வேகவைக்கவும்.
  • பிறகு அன்னாசி துண்டங்களைச் சேர்த்து கலக்கி சிக்கன் மீது ஊற்றி, பாதாம், பிஸ்தா தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.
கால அளவு 45 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 5 நபர்களுக்கு
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி