சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

சிக்கன் தர்பாரி

கோழி ஒன்று
தக்காளி அரை கப் (நறுக்கியது)
கொண்டைக்கடலை அரை கப்
முந்திரி 20
தேங்காய்ப்பால் ஒரு கப்
புளிக்கரைசல் ஒரு கப்
இஞ்சி ஒரு அங்குலதுண்டு
பூண்டு 10
உலர்ந்த மிளகாய் 4
கிராம்பு 4
பட்டை இரண்டு அங்குலத் துண்டு
ஏலக்காய் 6
மல்லி ஒரு மேசைக்கரண்டி
கசகசா அரை மேசைக்கரண்டி
நெய் 3 மேசைக்கரண்டி
வெங்காயம் 2 (சிறியது)
மஞ்சள்தூள் அரைத் தேக்கரண்டி
மிளகாய்த்தூள் அரைத் தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு

  • கொண்டைக்கடலையை மூன்று அல்லது நான்கு மணி நேரம் நன்கு ஊற வைத்து, பிறகு வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி ஒரு கப் அளவிற்கு பால் எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு நெல்லிக்காய் அளவு புளியை எடுத்து, மிதமான வெந்நீரில் கரைத்து ஒரு கப் அளவிற்கு நீரினை வடித்து எடுத்துக் கொள்ளவும்.
  • இஞ்சி, பூண்டினை தோலுரித்து மிளகாயுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். முந்திரியை தனியே விழுதாக அரைத்து வைக்கவும்.
  • கிராம்பு, பட்டை, ஏலக்காய், மல்லி, கசகசா ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து மிக்ஸியில் இட்டு தூளாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் நெய் விட்டு சூடேறியதும், நறுக்கின வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  • அத்துடன் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதினையும், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றையும் சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்கவும்.
  • அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள கோழித்துண்டங்களைச் சேர்த்து, குறைந்த தீயில் கோழி இறைச்சியில் உள்ள நீர் வற்றும் வரை வேகவிடவும்.
  • இப்போது நறுக்கின தக்காளி மற்றும் பொடியாக அரைத்து வைத்துள்ள கிராம்பு, ஏலம், மல்லி மசாலாவினையும் சேர்த்து நன்கு கிளறி தீயை சற்று அதிகப்படுத்தி வேக விடவும்.
  • மசாலா தக்காளியுடன் நன்கு கலந்து வெந்தவுடன், மசித்து வைத்துள்ள கொண்டைக்கடலை, முந்திரி விழுது, தேங்காய் பால் ஆகியவற்றை சேர்த்து வேகவிடவும்.
  • இறுதியாக புளிக்கரைசலை சேர்த்து, குழம்பு நன்கு கெட்டியாகும் வரை வேகவிட்டு இறக்கிப் பரிமாறவும்.
கால அளவு 45 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி