சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

டாங்டி கபாப்

சிக்கன் ட்ரம்ஸ்டிக்ஸ் 8
எலுமிச்சை சாறு ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி ஒரு அங்குலத் துண்டு
பூண்டு 6 பல்
பச்சை மிளகாய் 4
தயிர் ஒரு கப்
கடலை மாவு 2 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் ஒரு மேசைக்கரண்டி
கரம் மசாலாத்தூள் ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி
சாட் மசாலாத்தூள் ஒரு தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு

  • சிக்கன் ட்ரம்ஸ்டிக்ஸ் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு: கோழியின் தொடைப் பகுதி இல்லாத கால் துண்டங்கள் ட்ரம்ஸ்டிக்ஸ் என்றழைக்கப்படுகின்றது. ஒரு முனையில் சதைப் பகுதி உருண்டையாய் குவிந்த நிலையிலும், மறுமுனையில் மூட்டு இணைப்பு எலும்புமாக பார்பதற்கு ட்ரம்ஸ் வாசிக்க உதவும் குச்சியினைப் போன்று இருக்கும்.
  • கால் துண்டங்களை நன்கு கழுவி, கொழுப்புகளையும், மேல் உள்ள தேவையற்ற தோலையும் நீக்கி விடவும்.
  • சுத்தம் செய்த துண்டங்களை நன்கு துடைத்து, நீர் இல்லாமல் செய்து, அதன் மேல் கத்தி கொண்டு இரண்டு மூன்று வெட்டுகள் உருவாக்கிக் கொள்ளவும். அவற்றை எலுமிச்சை சாற்றில் நன்கு பிரட்டி, ஊற விடவும்.
  • இஞ்சி, பூண்டு தோலுரித்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். மிளகாயின் தண்டுபாகத்தினை நீக்கி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு மெல்லிய (மஸ்லின்) துணியில் தயிரினைக் கட்டித் தொங்க விட்டு, அதில் உள்ள அதிகப்படியான நீரையெல்லாம் வடித்துவிடவும்.
  • கடலை மாவினை குறைந்த தீயில் ஒரு அடிப்பிடிக்காத வாணலியில் இட்டு, தொடர்ச்சியாக கிளறிய வண்ணம் வறுத்துக் கொள்ளவும்.
  • பிறகு அதனை எடுத்து ஆறவிட்டு, தயிர், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள், உப்பு மற்றும் நறுக்கின பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இந்த கலவையை கோழியின் கால்துண்டங்கள் மீது நன்கு பூசி, சுமார் இரண்டு மணி நேரங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ஊற விடவும்.
  • பிறகு எடுத்து, தந்தூரி அடுப்பில், மிதமான சூட்டில், அனைத்துப் பக்கங்களும் ஒரே அளவில் வேகுமாறு தணலில் சுட்டெடுக்கவும்.
  • இதையே 220 டிகிரி C க்கு சூடேற்றப்பட்ட ஓவனில் சுமார் ஐந்து நிமிடங்கள் வைத்து வேகவிட்டு, பிறகு ஓவனின் வெப்பநிலையை 180 டிகிரி C க்கு குறைத்து மேலும் 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.
  • எல்லாப்புறமும் நன்கு வெந்துள்ளதா என்று பார்த்து, சாட் மசாலாத்தூள் தூவிப் பரிமாறவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி