| ஊறுகாய் என்று உச்சரிக்கும் போதே
பலருக்கும் நாவில் நீர் சுரக்கும். இந்தியர்களின், முக்கியமாக தென்னிந்தியர்களின்
அதிலும் குறிப்பாய் ஆந்திர மக்களின் முக்கிய துணை உணவு பதார்த்தம்
இந்த ஊறுகாய். ஆந்திர ஆவக்காய் ஊறுகாயின் சிறப்பு அகில உலகம் அறிந்தது.
இனிப்பு, புளிப்பு, காரம், துவர்ப்பு, கசப்பு, உவர்ப்பு என்று ஆறுசுவைகளிலும்
கிடைக்கக்கூடிய ஒரே ஒரு உணவுப் பதார்த்தம் இந்த ஊறுகாய்தான். |