சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

உப்பு கறி

ஆட்டுக்கறி 250 கிராம்
பட்டை 4
சின்ன வெங்காயம் 100 கிராம்
பூண்டு 50 கிராம்
மிளகாய் வற்றல் 8
சீரகம் கால் தேக்கரண்டி
எண்ணெய் சின்ன குழிகரண்டி
கருவேப்பிலை சிறிது
உப்பு தேவையான அளவு

  • எலும்பு நீக்கிய ஆட்டுக்கறியை எடுத்துக் கொண்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அலசி வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், பூண்டை உறித்துக் வைத்துக் கொள்ளவும்.
  • சின்ன குக்கரை அடுப்பில் வைத்து அரைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, எட்டு காய்ந்த மிளகாய்களை உடைத்துப் போட்டு வதக்கவும்.
  • வதங்கிய பின் உறித்து வைத்துள்ள வெங்காயம் பூண்டை போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.
  • இரண்டு நிமிடம் வதக்கிய பின் அலசி வைத்துள்ள கறியைக் கொட்டி ஒரு நிமிடம் வதக்கவும்.
  • வதக்கிய பின் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஐந்து விசில் வரை வேக வைக்கவும்.
  • குக்கரில் நீராவி வெளியேறிய பின் ஒரு வாணலியில் மீதம் உள்ள எண்ணெயை ஊற்றி சீரகம் தாளித்து அதனுடன் பட்டையையும், கறிவேப்பிலையையும் போட்டு தாளிக்கவும்.
  • பிறகு குக்கரில் வைத்துள்ள கறியைக் கொட்டி, தேவையான அளவு உப்பும் சேர்த்து, தண்ணீர் வற்றி எண்ணெய் வெளிவரும் வரை கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவும்.
கால அளவு 20 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் ஆர். நீலா, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி