சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

பீன்ஸ் பருப்பு பொரியல்

பீன்ஸ் 250 கிராம்
துவரம்பருப்பு 100 கிராம்
தேங்காய் ஒரு விள்ளல்
உலர்ந்த மிளகாய் 4
கடுகு அரைத்தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு அரைத்தேக்கரண்டி
பெருங்காயம் சிறிது
உப்பு தேவையான அளவு
எண்ணெய் சிறிதளவு

  • துவரம்பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைமணி நேரம் ஊற வைக்கவும்.பீன்ஸை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  • பருப்பு ஊறியபின் நன்றாகக் களைந்து வடித்து, அதனுடன் தேங்காய் மற்றும் மிளகாயையும் சேர்த்து உரலில் அல்லது மிக்ஸியில் போட்டுக் கெட்டியாக மை போல அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் அரைத்த பருப்பை அடை போல தட்டையாகத் தட்டி வாணலியில் போடவும்.
  • ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு சிறிது எண்ணெய்யை சுற்றிலும் விடவும். மறு பக்கமும் வெந்ததும் அதனை எடுத்துத் தனியாக வைத்துக்கொள்ளவும்.
  • மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெயை விடவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு,பெருங்காயம் முதலியவற்றைப் போடவும்.
  • கடுகு வெடித்து பருப்பு சிவந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள பீன்ஸினைப் போட்டு நூறு மில்லி தண்ணீர் விட்டு அதனுடன் தேவையான அளவு உப்பையும் போட்டு மூடி வைத்து வேகவிடவும்.
  • காய் வெந்து தண்ணீர் சுண்டியதும், பருப்பு அடையை பொடியாக உதிர்த்து காயுடன் போட்டு நன்றாகக் கிளறி மேலும் சிறிது நேரம் அடுப்பிலேயே வைத்திருந்து பின்பு இறக்கவும்.
கால அளவு 45 நிமிடங்கள்
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி