சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

காரட் மோலி

காரட் 250 கிராம்
பெரிய வெங்காயம் 50 கிராம்
தக்காளி 250 கிராம்
தேங்காய் ஒரு மூடி
பூண்டு 1
பச்சைமிளகாய் 6
கொத்தமல்லி ஒரு கட்டு
எண்ணெய் 10 கிராம்
உப்பு தேவையான அளவு

  • தேங்காயைத் துருவி பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும்.
  • இஞ்சி, பூண்டைத் தனியாகவும், பச்சை மிளகாய், கொத்தமல்லியைத் தனியாகவும் அரைத்து தனித்தனி பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு கொதி தண்ணீர் விட்டு பிறகு தண்ணீரை வடித்து விடவும்.
  • தக்காளியின் தோலை நீக்கி பழத்தை மசித்துக் கொள்ளவும்.
  • காரட்டைத் தோலைச் சீவி வட்டமாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது உப்பு போட்டு தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். காய் வெந்ததும் இறக்கி தண்ணீரை வடித்து விடவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து, எண்ணெய் காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு சிவக்க வதக்கிக் கொள்ளவும்.
  • பிறகு இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டுக் கிளறி சிறிது நேரம் அப்படியே வைத்திருக்கவும்.
  • பிறகு கொத்தமல்லி, பச்சைமிளகாய் விழுதைப் போட்டு கிளறவும். அதனுடன் தக்காளிச்சாறு தேங்காய்ப்பால் இரண்டையும் விட்டு கலந்து கொள்ளவும். தேவையான உப்பைச் சேர்த்துக் கொள்ளவும்.
  • ஒரு கொதி வந்தவுடன் வேக வைத்த காரட்டைப் போட்டுக் கிளறி விடவும்.
  • சுமார் ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்து பிறகு இறக்கி விடவும்.
கால அளவு 30-40 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. ஜீவா மோகன் தாஸ், சென்னை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி