சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

சிக்கன் மக்கானி

கோழி ஒன்று
எலுமிச்சைசாறு 2 மேசைக்கரண்டி
காஷ்மீரி மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
தயிர் ஒரு கப்
இஞ்சி 4 அங்குலம்
பூண்டு 16 பல்
கரம் மசாலத்தூள் ஒரு மேசைக்கரண்டி
கடுகு எண்ணெய் 2 மேசைக்கரண்டி
வெண்ணெய் 4 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் 3
தக்காளி விழுது 400 கிராம்
மிளகாய்த்தூள் ஒரு மேசைக்கரண்டி
பூண்டு விழுது 2 மேசைக்கரண்டி
சீனி 2 மேசைக்கரண்டி
பட்டை சிறுதுண்டு
ஏலக்காய் 2
கிராம்பு 3
ப்ரஷ் க்ரீம் அரை கப்

  • கோழியினை கழுவி சுத்தம் செய்துக் கொண்டு, துண்டங்களாக்கிக் கொள்ளவும். பெரியத் துண்டங்கள் மீது கத்திக் கொண்டு சில வெட்டுகள் போட்டுக் கொள்ளவும்.
  • ஒரு தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய்த்தூள், ஒரு மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு, சிறிது உப்பு ஆகியவற்றை ஒன்றாய் கலந்து கோழித்துண்டங்கள் மீது நன்கு பூசி அரை மணி நேரம் ஊறவிடவும்.
  • தயிரினை ஒரு மெல்லியத்துணியில் கட்டித் தொங்கவிட்டு அதில் உள்ள நீரினை வடித்து எடுக்கவும். இரண்டு அங்குல அளவிற்கு இஞ்சியை எடுத்து கொண்டு 6 பல் பூண்டுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, ஒரு மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு, அரைத் தேக்கரண்டி கரம் மசாலாத் தூள், கடுகு எண்ணெய் ஆகியவற்றை தயிருடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • இந்த கலவையை கோழித்துண்டங்கள் மீது நன்கு பூசி மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்கு குளிர்சாதனப் பெட்டியில் வைத்து நன்கு ஊறவிடவும்.
  • ஊறிய பிறகு எடுத்து சூடேற்றப்பட்ட ஓவனில் சுமார் 200 டிகிரி Fல் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். பிறகு எடுத்து வெண்ணெய் தடவி மீண்டும் இரண்டு நிமிடங்கள் வேகவிடவும். இதனை தந்தூரி அடுப்பிலும் செய்யலாம்.
  • இப்போது இதற்கான குழம்பினை தயார் செய்யவும். மீதமுள்ள இஞ்சி, பூண்டினைத் தோலுரித்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாய்களை தண்டி நீக்கி, கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் வெண்ணெய் விட்டு சூடேறியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்கவும்.
  • அத்துடன் இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கின பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும்.
  • பிறகு தக்காளி விழுது, மிளகாய்த் தூள், கரம் மசாலாத்தூள், உப்பு மற்றும் ஒரு கோப்பை தண்ணீர் சேர்த்து சற்று தீயை அதிகப்படுத்தி வேகவிடவும்.
  • கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்து வைத்து மேலும் 10 நிமிடங்களுக்கு வேகவிடவும்.
  • பிறகு சீனியைச் சேர்க்கவும். அத்துடன் வேகவைத்து எடுத்துள்ள கோழித்துண்டங்களைச் சேர்த்து குறைந்த தீயில் மேலும் ஐந்து நிமிடங்கள் வேகவிடவும்.
  • ப்ரஷ் கிரீமினைச் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.
கால அளவு 45 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 5 நபர்களுக்கு
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி