உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

வெஜ் கேசடீயா 2

 

இது மெக்சிகன் முறையில் எமது பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவது. இது எங்கட ஸ்டைல் :)

தேவையான பொருட்கள்

  • வீட் அல்லது கார்ன் ரோர்டியா - 4 (Wheat/Corn tortilla)
  • துருவிய கரட் - 1/2 கப்
  • ஊறவைத்த கொண்டைக்கடலை - 1/2 கப்
  • வெட்டிய வெங்காயம் - 1/4 கப்
  • உள்ளி- 3 பல்லு
  • பச்சை மிளகாய்
  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  • உப்பு
  • எலுமிச்சை - பாதி
  • சீஸ் கலவை - 1 கப்
  • (பார்மஜான், மொற்சரில்லா, செடார்)
  • எண்ணெய்

செய்முறை

  • கொண்டைக்கடலையை உப்பு போட்டு அவித்து வைக்கவும்.
  • உள்ளியை நசித்து வைக்கவும்.
  • பச்சை மிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கி உப்பு தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும்.
  • ரோர்டியாவை தோசைகல்லில் இரு பக்கமும் சுட்டு எடுக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
  • பின்னர் உப்பு, உள்ளி, மிளகாய்தூள், கரட், கொண்டைக்கடலை சேர்த்து வதக்கவும்.
  • கலவை நன்கு சேர்ந்ததும் இறக்கவும்.
  • பின்னர் சுட வைத்த ரோர்டியாவை ஒவ்வொன்றாக எடுத்து அதன் அரைவாசியில் வதக்கிய கலவையை பரப்பி சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து விடவும்.
  • பின் அதன் மேலே துருவிய சீஸ் கலவையை பரப்பி சிறிது உப்பு தூவவும்.
  • பின் அதன் மேல் சிறிது பச்சை மிளகாயை தூவி மறு பாதியால் மூடவும்.
  • மூடிய ரோர்டியாவின் மேற்புறத்தில் ஒரு பிரஷால் சிறிது எண்ணெய் தடவி சிறிது உப்பு தூவவும்.
  • தோசைக்கல்லை சூடாக்கி இதனை திரும்பவும் இரு பக்கமும் திருப்பி சுட்டு எடுக்கவும். (சீஸ் உருகும்வரை)
  • சுவையான வெஜ் கேசடீயா தயார். இதை அப்படியே சாப்பிடலாம்.

குறிப்பு:

இதற்கு 8 அங்குல ரோர்டியாவை பயன்படுத்தவும். சீஸ் சிறிது அதிகமாகவே போடவும் அப்பொழுதுதான் சாப்பிடும்போதும் கேசடீயா பிரியாது ஒட்டிக்கொண்டே இருக்கும். பச்சை மிளகாய்க்கு பதில் மிளகாய்தூளை அதிகமாக சேர்க்கலாம். பச்சை மிளகாய் போடாவிட்டாலும் சுவையாகவே இருக்கும்.உள்ளே வைக்கும் ஃபில்லிங்கிற்கு வதக்கும்போது வாசனைக்காக 1/2 தேக்கரண்டி ஒரெகனோ (Oregano) சேர்க்கலாம்.

வழங்கியவர்

Mrs.B.Narmatha

பரிமாறும் அளவு

சமைக்கும் நேரம்

2 நபர்களுக்கு 20 நிமிடங்கள்
  random food image


comments