தேவையானப் பொருட்கள்
- முள்ளில்லாத மீன் - கால் கிலோ
- மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
- சீரக தூள் - அரை தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கு
- தக்காளி - அரை
- பச்சமிளகாய் - இரண்டு
- எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி
- வெங்காயம் - இரண்டு (பொடியாக அரிந்தது)
- கொத்து மல்லி தழை - கால் கப் (பொடியாக அரிந்தது)
- கரம் மசாலா தூள் - அரை தேகக்ரண்டி
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு தேக்கரண்டி
- முட்டை வெள்ளை கரு - முன்று
- கிரெம்ஸ் பவுடர் - கட்லெட் பிரெட்ட தேவையான அளவு
- உருளை கிழங்கு- கால் கிலோ(வேகவைத்து மசித்தது)
- கேரட்- ஒன்று சிறிய்து (வேகவைத்து மசித்தது)
|
செய்முறை
- மீனை சுத்தமாக கழுவி முள்ளில்லமல் எடுத்து வேகவைத்து உதிர்த்து கொள்ளவும்.
- உதிர்த்து வைத்துள்ள மீனில், மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,சீரக தூள்,கரம் மசாலா தூள், உப்பு தூள்,இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு தக்காளி,பச்ச மிளகாயை மிக்சியில் அடித்து அதையும் சேர்த்து லேசாலா வதக்கவும்.
- பிறகு வெந்து வைத்துள்ள உருளை,கேரட்டை உதிர்த்து சேர்க்கவும்.
- பிறகு பொடியாக் அரிந்து வைத்துள்ள வெங்காயம்,கொத்துமல்லி தழை, எலுமிச்சை சாறு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- முட்டையை நல்ல அடித்து அதில் ஒரு எலுமிச்சை சைஸ் உருண்டையை உருட்டி வடை போல் தட்டி முட்டையில் தோய்த்து கிரெம்ஸ் பவுடரிலும் இரு பக்கமும் தோய்த்து பத்து நிமிடம் கழித்து பொரித்தெடுக்கவும்.
|
குறிப்பு:
இதை பார்டிகளுக்கு செய்து வைக்கலாம்.இதில் கிரெம்ஸ் பவுடருக்கு பதில் கார்ன் பிளேக்ஸையும் தூளாக்கி தோய்க்கலாம். நல்ல கிரிஸ்பியாக இருக்கும்
வழங்கியவர்
ஜலீலா
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
நான்கு நபர்களுக்கு |
25 நிமிடம் |
20 நிமிடம் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
50 நிமிடங்கள் 26 நொடிகள் முன்பு -
51 நிமிடங்கள் 10 நொடிகள் முன்பு -
56 நிமிடங்கள் 54 நொடிகள் முன்பு -
57 நிமிடங்கள் 25 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 6 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 18 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 23 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 24 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 26 நிமிடங்கள் முன்பு -