உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

மட்டன் பிரியாணி - 2.

 

ஒருமுறை எங்க வீட்டுக்கு வந்த சமையல்காரர் செய்த பிரியாணி இந்த முறை. தேங்காய் எண்ணெய் சேர்த்தான்னு யோசிப்போம். ஆனால், வித்தியாசமான ருசியும், மணமும்... ஒருமுறை முயற்சித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • பாஸ்மதி அரிசி - 4 டம்ளர்(1/2 கிலோ),
  • மட்டன் - 1/2 கிலோ,
  • பெரிய வெங்காயம் - 1,
  • சின்ன வெங்காயம் - 1/4 கிலோ,
  • தக்காளி - 1,
  • இஞ்சி - ஒரு துண்டு,
  • பூண்டு - ஒரு முழு பூண்டு,
  • பச்சை மிளகாய் - 10,
  • கசகசா - 2 மேசைக்கரண்டி,
  • சோம்பு - 1/2 தேக்கரண்டி,
  • தனியாதூள் - ஒன்றரை மேசைக்கரண்டி,
  • நறுக்கிய புதினா - 1 கைப்பிடி,
  • நறுக்கிய கொத்தமல்லி - 1 கைப்பிடி,
  • தேங்காய் - 1(பெரிதாக),
  • பட்டை - சிறிது,
  • கிராம்பு - 4,
  • ஏலக்காய் - 4,
  • கேசரி கலர் - 1/2 தேக்கரண்டி,
  • எலுமிச்சம் பழம் - 1/2 மூடி,
  • எண்ணெய் - 4 மேசைக்கரண்டி,
  • நெய் - 3 மேசைக்கரண்டி,
  • தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி,
  • உப்பு - தேவையான அளவு.

செய்முறை

  • வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியை பொடியாகவும் நறுக்கவும்.
  • அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
  • சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா, பூண்டு சேர்த்து நைசாக அரைக்கவும்.
  • சோம்பு, கசகசா, இஞ்சி, தனியாதூள் சேர்த்து தனியாக அரைத்து, அதனுடன் சிறிது உப்பு, சேர்த்து மட்டனுடன் கலந்து வேக வைத்து வைக்கவும்.
  • தேங்காயைத் துருவி 8 டம்ளர் அளவு பால் எடுத்து வைக்கவும்.
  • வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை வதக்கியபின், அரிசியை சேர்த்து வதக்கி இறக்கவும்.
  • பெரிய பாத்திரத்தில் எண்ணெயை விட்டு, காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
  • முதலில் அரைத்து வைத்த வெங்காய விழுது சேர்த்துவதக்கவும்.
  • நன்கு வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி வதங்கி கரைந்ததும், தேங்காய்ப்பால் ஊற்றி கொதிக்க விடவும்.
  • தேங்காய்ப்பால் கொதிக்கும் போது வறுத்த அரிசியைப் போடவும்.
  • அரிசி பாதி வெந்ததும் உப்பு, எலுமிச்சம் பழ சாறு, கேசரிகலர், வேக வைத்த மட்டன் சேர்க்கவும்.
  • 5 நிமிடம் கழித்து தம்மில் அரை மணி வைத்து இறக்கவும்.

குறிப்பு:

ஆனியன் ரெய்த்தாவுடன் பரிமாறலாம். கத்தரிக்காய் கிரேவியும் நன்றாக இருக்கும்.

வழங்கியவர்

இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.

பரிமாறும் அளவு

சமைக்கும் நேரம்

4 நபர்களுக்கு. 40 நிமிடங்கள்.
  random food image


comments
Selvi madam santheygam
மார்ச் 3, 2008 - 7:46am - வழங்கியவர் portiamanohar

Portia Manohar
Selvi Madam
Thallapa kattu briyani seithu asathiten,indha briyani indha vaaram asthalam irukein aana ennaku santheygam,
1/4kg vengayam evvalavu ennikai?
milagai thool vendama?
coconut oil samayalukunu kidaikuma?
taste function briyani mathri irukuma madam,samalaykarar seitha andha mathri taste la thanaey irrukum?
romba questions kettuvitan.
sorry madam.reply me madam want to get appreciation from my hubby and son this weekend.

சந்தேகத்திற்கு விளக்கம்...
மார்ச் 3, 2008 - 10:48am - வழங்கியவர் senthamizh selvi

அன்பு போர்ஷியா,
நலமா? தப்பேயில்லை. சந்தேகத்தை தீர்த்துக் கொண்டு சமைப்பதுதான் சரி. கேளுங்க, முடிஞ்ச வரை பதில் தருகிறேன். குறிப்பு கொடுத்தால் மட்டும் போதாதே, அதற்கான சந்தேகம் வரும் போது தீர்க்க வேண்டியதும் அவசியம் அல்லவா?
கால் கிலோ வெங்காயம் மீடியம் சைஸைசில் 15 லிருந்து 20 வரை எடுத்துக் கொள்ளலாம்.
மிளகாய்த்தூள் வேண்டாம். மிளகாய் காரமே போதும். உங்களுக்கு காரம் அதிகம் தேவைன்னா, பச்சை மிளகாயை கூட்டிக் கொள்ளலாம்.
இல்லை, சமையலுக்குன்னு தனி தேங்காய் எண்ணெய் இல்லை. சுத்தமான தேங்காய் எண்ணெயை உபயோகிக்கலாம்.
விருந்துக்கான பிரியாணி டேஸ்டில் இருக்கும், நல்ல ரிச்சாக இருக்கும். சமையல்காரர் செய்த சுவை வரும்.
கண்டிப்பாக கணவர், மகனிடமிருந்து பாராட்டு கிடைக்கும். தைரியமாக முயற்சி செய்யுங்கள். உங்களின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

Nandri selvi madam
மார்ச் 3, 2008 - 7:21pm - வழங்கியவர் portiamanohar

Portia Manohar
Iam fine mam,thanks for your prompt response.
romba santhosham madam,indha vara kadaisiyil idhai seithu vittu pinnootam tharugiren.madam ennaku coconut oil eppadi vanganumnu sollungalen?inga ennaku jakarta vil indian storela visarikanum. Take care.

அன்பு போர்ஷியா,
மார்ச் 4, 2008 - 3:36am - வழங்கியவர் senthamizh selvi

அன்பு போர்ஷியா,
நலமா? அப்பறம் இந்த மேடம் வேண்டாமே, ஸ்கூல்ல சொல்ற மாதிரி இருக்கு:-)
தேங்காய் எண்ணெய் இங்கன்னா, சின்ன பேக் கூட கிடைக்குது. அங்க எப்படின்னு தெரியலையே. எதற்கும் இந்தியன் ஸ்டோர்ஸில் கேட்டு பாருங்கள். வாசனை கலந்த (சென்ட்டெடு)எண்ணெய் இல்லாமல் சாதாரண எண்ணெய் வாங்குங்கள். வாசனன கலந்தது தலைக்கு மட்டுமே பயன் படுத்த முடியும். கண்டிப்பாக அங்கு கிடைக்கும்னு நினைக்கிறேன்.
அன்புடன்,
செல்வி.

Thanks Selvi Madam
மார்ச் 4, 2008 - 7:37am - வழங்கியவர் portiamanohar

Portia Manohar
iam fine.And how are you?thanks madam. how to address you?
you are senior to me,i'll try to find in indian store the oil and will prepare this weekend.
ofcourse you are a cookery lecture for beginners like me.you tell me how to call you.ok.
take care. bye

மாணவி போர்ஷியா...
மார்ச் 4, 2008 - 9:42am - வழங்கியவர் senthamizh selvi

அன்பு (மாணவி) போர்ஷியா,
நான் நலமே. என்னை எப்படி வேணா கூப்பிடலாம், பேர் சொல்லி கூட் :-))
என் பெண்ணுக்கு 27 வயசு. உங்க வயசை பொறுத்து எப்படின்னாலும் எனக்கு ஓகேதான். அறுசுவையில நிறைய பேர் என் சகோதரிகள் & மகளும் கூட.
நான் லெக்சரர்னா நீங்க மாணவிதானே!!
ஆனா, நான் கொஞ்சம் கண்டிப்பான லெக்சரர், பரவாயில்லையா :-))
அன்புடன்,
செல்வி.

Anbulla Selvi Amma
மார்ச் 4, 2008 - 6:52pm - வழங்கியவர் portiamanohar

Portia Manohar
Oh my god selvi amma i cant beleive that u have a daughter in 27yrs,i saw your photo with son and husband.Am i right? Thought may be my sister age as my sister son is entering college. its unbeleivable.now knowing about your daughter and age. i need to call you amma,that is the right word as iam 26.So how abt your daughter? got married and settled.How is your life?lets share.
Me in jakarta with my husband and son in 5yrs.
en sontha mann thanjavur(nel kalanjiyam).

மெயில் ஐடி...
மார்ச் 5, 2008 - 11:10am - வழங்கியவர் senthamizh selvi

அன்பு போர்ஷியா,
நலமா? எதற்கு இவ்வளவு ஆச்சரியம்? ஆமாம், போட்டோவில் இருப்பது நானும், எனது கணவரும், மகனும்தான். மகளுக்கு திருமணம் முடிந்து செட்டிலாகி விட்டாள். மற்ற விஷயங்கள் senthsel@yahoo.co.in என்கிற மெயில் ஐடிக்கு மெயில் பண்ணினா பேசிக்கலாம். ஓகேவா? மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

mailing today
மார்ச் 5, 2008 - 10:04pm - வழங்கியவர் portiamanohar

Portia Manohar
iam happy to see your reply.
will send u an email today. ok
take care.salem meen kulambu super.