உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

சிக்கன் பிரியாணி - 2

 

இது இஸ்லாமிய இல்ல விஷேஷங்களில் செய்யும் சமையல் காரர்களின் அளவு.

தேவையானப் பொருட்கள்

  • பாசுமதி அரிசி - இரண்டு கிலோ
  • கோழி - முன்று முழு கோழி
  • தக்காளி - 600 கிராம்
  • வெங்காயம் - 600 கிராஅம்
  • இஞ்சி - 200 கிராம்
  • பூண்டு - 100 கிராம்
  • தயிர் - 20 மில்லி
  • கொத்து மல்லி தழை - ஒரு கட்டு
  • புதினா - அரை கட்டு
  • பச்ச மிள்காய் - ஐம்பது கிராம்
  • மிளகாய் தூள் - ஐம்பது கிராம்
  • எலுமிச்சை - இரண்டு
  • பட்டை - இரண்டு அங்குல துண்டு ஐந்து
  • கிராம்பு - - எட்டு
  • ஏலம் - ஐந்து
  • எண்ணை - 250 மில்லி
  • டால்டா - 250 மில்லி

செய்முறை

  • சிக்கனை கழுவி தண்ணீரை வடிக்கவும்.
  • அரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்
  • முதலில் பெரிய பிரியாணி சட்டியை காய வைத்து அதில் எண்ணை + டால்டாவை ஊற்றி காய்ந்ததும் பட்டை,ஏலம்,கிராம்புவை போட்டு வெடிக்கவிட்டு வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து போட்டு வதக்கி மூடி போட்டு ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவேண்டும்.
  • வெங்காயம் வதங்கியதும் அதில் பூண்டை போட்டு வதக்கி ஐந்து நிம்டிஅம் சிம்மில் வைக்கவும்.பிறகு கொத்துமல்லி புதினா போட்டு இஞ்சியையும் போட்டு வதக்கவேண்டும்.
  • தாளிப்பு பொன் முருவலாகனும், கலர் மாறியதும் தக்காளி பச்ச மிள்காயை போட்டு ஐந்து நிமிடம் சிம்மில்வைக்க வேண்டும்.
  • தக்காளி மடங்கியதும், உப்பு, மிள்காய் தூள் போட்டு நல்ல வேக விடவேண்டும்.
  • வெந்ததும் வடித்து வைத்துள்ள சிக்கனை போட்டு நல்ல மசாலா எல்லா இடத்திலும் சேருமாரு பிறட்டி தயிரையும் அடித்து ஊற்றி ,ஒன்னறை எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு கிளறவும்.
  • இப்போது எல்லம் நல்ல வெந்து எண்ணை மேலே மிதக்கும் வரை விடவும் எப்படியும் 20 நிமிடத்தில் வெந்து விடும்.
  • நல்ல பெரிய வாயகன்ற சட்டியை 2 கிலோவிற்குற்கும் பெரிய சட்டியாக இருக்கனும் அப்ப தான் கொதிக்கும் போது அரிசி சிக்காமல் உதிரியாகவரும்.
  • உலையை கொதிக்கவிட்டு ஊறவைத்துள்ள அரிசியை தண்ணீரை வடித்து போட்டவும்.
  • கொதித்து கொண்டிருக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணை, அரை எலுமிச்சை சாறு பிழிந்து ஊற்றி முக்கால் பதத்தில் பெரிய கண் வடிகட்டியில் வடித்து கிரேவியில் கொட்ட வேண்டும்.
  • சாதத்தை சமப்படுத்தி டம் போட வேண்டும் அடுப்பின் மேல் தோசை தவ்வா (அ) தம் போடும் கருவி வைத்து சாதம் கலந்த கிரேவி சட்டி வைத்து மூடி போட்டு வடித்த கஞ்சி தண்ணீரை அதன் மேல் ஏற்றி விடவேண்டும்.
  • ஐந்து நிமிடம் கழித்து கலர் பொடி கொஞ்சம தண்ணீரில் கரைத்து ஊற்றி தெளித்து லேசாக பிறட்டி மறுபடியும் 15 நிமிடம் தம்மில் விட வேண்டும்.
  • சுவையான கம கமன்னு மணக்கும் சிகன் பிரியாணி ரெடி.

குறிப்பு:

இதற்கு தொட்டு கொள்ளஎண்ணை கத்திரிக்காய் (அ) கத்திரிக்காய் தொக்கு, தக்காளி ஹல்வா(அ) பீட்ரூட் ஹல்வா, தயிர் சட்னி, ம்ம் ஜமாயுங்கோ.

வழங்கியவர்

ஜலீலா

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

12 லிருந்து 13 நபர்களுக்கு 30 நிமிடம் ஒரு மணி நேரம்
random food image


comments
நிருப்பமா, பிரியா
ஏப்ரல் 6, 2008 - 10:22pm - வழங்கியவர் Jaleela Banu

பிரியா சிக்கன் பிரியாணி கேட்டீங்களே இதை பாருங்கள் உங்க அளவுக்கு தகுந்தாற்போல் குறைத்து கொள்ளுங்கள்.
நிருப்பமா,

ஸ்வீட்க்கு போடும் பிஸ்தா பிளெயினாக வாங்கனும்.
சிலது சால்ட்டடாக இருக்கும் அதை போட கூடாது அது சாப்பிட சரியா?
ஜலீலா

hi akka
ஏப்ரல் 7, 2008 - 4:29pm - வழங்கியவர் doreen

jaleela akka unga priyani seithu parthenn.nalla suvai.en husband nalla irukku endru sonnar.thanks akka.

டியர் டொரீன் (சிக்கன் பிரியாணி)
ஏப்ரல் 14, 2008 - 7:26am - வழங்கியவர் Jaleela Banu

டியர் டொரீன்
இது தான் உங்க பெயரா?

சிக்கன் பிரியாணி செய்து பார்த்து பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி.
ஜலீலா