சிக்கன் பிரியாணி - 2 |
|
தேவையானப் பொருட்கள்
- சிக்கன் - அரை கிலோ
- பாஸ்மதி அரிசி - மூன்று கப்
- தண்ணீர் - ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப்
- பெரிய வெங்காயம் - இரண்டு
- தக்காளி - மூன்று
- புதினா - அரை கட்டு (அ) ஒரு கப் பொடியாக நறுக்கியது
- கொத்தமல்லி - அரை கட்டு (அ) ஒரு கப் பொடியாக நறுக்கியது
- இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
- பூண்டு - பத்து பல்
- நெய் - ஒரு மேஜைக்கரண்டி(விருப்பப்பட்டால்)
- எண்ணெய் - அரை கப்
- மஞ்சப்பொடி - ஒரு தேக்கரண்டி
- கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
- பச்சை மிளகாய் - எட்டு
- எழுமிச்சம் பழம் - ஒன்று
- தயிர் - ஒரு கப்
- உப்பு - இரண்டு தேக்கரண்டி
- பொடிக்க:
- பட்டை - ஒரு துண்டு
- கிராம்பு - ஆறு
- ஏலக்காய் - ஆறு
|
வெங்காயம், தக்காளி, புதினா மற்றும் கொத்துமல்லியை நீளமாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை நீளமாக அரிந்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டை விழுதாக அரைத்து வைக்கவும். பட்டை, லவங்கம் மற்றும் ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.
|
 |
சிக்கனை தயிர், அரை தேக்கரண்டி உப்பு மற்றும் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கலந்து ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைக்கவும்.
|
 |
பாஸ்மதி அரிசியை நன்கு கழுவிவிட்டு இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அரிசியை ஊறவைத்த தண்ணீரை வடித்து விட்டு எடுத்து கொள்ளவும்.
|
 |
வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கின வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.
|
 |
வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு தக்காளி, புதினா மற்றும் கொத்துமல்லியை சேர்த்து வதக்கவும்.
|
 |
நன்கு வதங்கியவுடன் பொடித்த லவங்கம், பட்டை, ஏலக்காய் பொடி மற்றும் கரம் மசாலாவை போட்டு வதக்கவும்.
|
 |
பிறகு சிக்கனை போட்டு வதக்கி மூடி போட்டு வைக்கவும். 15 நிமிடம் வரை அடிக்கடி கிளறவும்.
|
 |
சிக்கன் பாதி வெந்தவுடன் நாலரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
|
 |
குழம்பு ஒரு கொதி வந்தவுடன் அரிசியை போட்டு கிளறவும்.
|
 |
அரிசி பாதி வெந்தவுடன் அனலை குறைத்துவிட்டு எழுமிச்சையை பிழிந்து மூடி வைக்கவும்.
|
 |
அரிசி வேகும்வரை அடிக்கடி திறந்து பார்த்து மெதுவாக சாதம் உடையாமல் கிளறிவிடவும். அரிசி வெந்தவுடன் இறக்கிவிட்டு புதினா மற்றும் கொத்துமல்லி தூவி அலங்கரித்து பரிமாறவும்.
|
 |
இந்தக் குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் திருமதி. வாணி ரமேஷ் அவர்கள். அறுசுவை நேயர்களுக்காக நூற்றுக்கும் அதிகமான குறிப்புகள் வழங்கியுள்ளார். சென்னையைச் சேர்ந்த இவர் கடந்த இரண்டு வருடங்களாக வசித்து வருவது கலிஃபோர்னியாவில். சமையலில் தான் இன்னமும் கற்றுக் கொள்ளும் நிலையிலேயே இருப்பதாக அடக்கமுடன் கூறும் இவர், வித்தியாசமான, புதுபுதுக் குறிப்புகளை முயற்சித்துப் பார்ப்பதை தனது பொழுதுபோக்காக வைத்துள்ளார். இங்கே அறுசுவையில் நேயர்கள் பயனுறும் வண்ணம் பல குறிப்புகளை படங்களுடன் அளித்து வருகின்றார். |
 |
|
முந்தைய குறிப்புகள் பக்கத்திற்குச் செல்ல..
|
சமீபத்தியக் கருத்துக்கள்
33 நொடிகள் முன்பு -
8 நிமிடங்கள் 15 நொடிகள் முன்பு -
12 நிமிடங்கள் 18 நொடிகள் முன்பு -
27 நிமிடங்கள் 34 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 35 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 36 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 44 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பு -