rajinibai's blog - அறுசுவை உறுப்பினர் - எண் 54242
blog image

மாத்தி யோசிங்க‌

blog image

மாத்தி யோசி பதிவை படித்த‌ எனது தோழிகள் என்னை கழுவி ஊத்திவிடாங்க‌. ஒவ்வொருத்தரும் கதை சொல்லி அதுக்கு பல‌ தீர்ப்புக்களையும் ''நாட்டாமை மாத்தி யோசி''' நு பன்ச் வாய்ஸ் கொடுத்துடாங்க‌. சினிமா திரைப்படத்துக்கு கூட‌ மாத்து முடிவு சொல்றாங்க‌.


மாத்தி யோசி

blog image

நான் தலைமையாசியராக‌ பணி புரிந்தாலும் முதல் வகுப்புக்கு பாடம் சொல்லித்தர‌ மிகவும் விரும்புவேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் முதல் வகுப்பில் தான் இருப்பேன். பொதுவாகவே பிள்ளைகள் செல்ப் கான்பிடன்ஸ் ஆக‌ வளரவேண்டும் என்பதே என் எண்ணம். பொது அறிவு வளர்ச்சிக்கும், நீதி போதணை வகுப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்.


கோடை விடுமுறை டிப்ஸ்

blog image

வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள். ஆனால் கோடை வெயிலின் அருமை வெயிலுக்குத் தான் தெரியும். அதுவும் வெயிலுக்கு பேர் போன‌ வெயிலூர் பட்டம் பெற்ற‌ வேலூரில் வசிக்கும் நாங்கள் படும்பாடு அந்த‌ அக்னி பகவானுக்கே வெளிச்சம். எதோ தேர்வு எழுதினோமா, பள்ளிக்கு லீவு விட்டாங்களா, பாட்டி வீட்டுக்குப் போனோமா, ஜாலியா இருந்தோமோ என்பதே கனவாகி விட்டது.


ஸரிகமபதனிஸ‌ ////// 2

''கூலி மிகக் கேட்பார். கொடுத்தது எல்லாம் தாம் மறப்பார்.'' என்று மகா கவி பாரதியார் வேலை செய்யும் உதவியாளர்களைப் பற்றி சொல்வார். ஆனால் என் வீட்டில் பணி புரிந்த‌ சரோஅம்மா மிகவும் நல்லவர். என் வசதியை கவனம் பார்ப்பார்கள், அவர்கள் வசதியை பார்க்கமாட்டார்கள். எந்த‌ வேலையையும் சுறுசுறுப்பாக‌ செய்வார். நாங்கள் காலை நேரத்தில் வேலைக்குச் செல்லும் அவசரத்தில் ''நீ சாப்பட்டாயா?


ஜே ஜே ஜெயலலிதா

போயஸ் கார்டன் பொன்மகளே
வேதா இல்லத்தின் வேத நாயகியே
சந்தியாவின் சண்டி ராணியே
தமிழ் நாட்டின் தங்கத்தாமரையே

மந்திரிகளின் மகாராணியே
தொண்டர்களின் புரட்சித் தலைவியே
கழகக் கட்சியரின் கண்மணியே
பெண்ணின் பெருமைப் போற்றிய‌ பெண்மணியே


ஸரிகமபதனிஸ‌ ////// 1

blog image

என் வாழ்க்கையில் என்னைக் கவர்ந்த‌, பாதித்த‌, சந்தோழப் பட‌ வைத்த‌, எனக்கும் ரோல் மாடலாக‌ இருந்த‌, இருக்கின்ற‌ சக‌ தோழிகள் எட்டு பெண்கள். அவர்களுக்கு நான் வைத்த‌ செல்லப் பெயர் //ஸ ரி க‌ ம‌ ப‌ த‌ நி ஸ‌ ///. அவர்களை அருசுவை தோழிகளுக்கு அறிமுகப் படுத்துகிறேன். என்னடா ரஜினி சங்கீதம் பாடுகிறாள் என்று பயந்து விட்டீர்களா? வேண்டாம் நமக்கு அந்த‌ சோதணை. என்னுடைய‌ முதல் தோழி ஸ .


கலாட்டாக் கல்யாணம்

blog image

கல்யாணம் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது, கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்''''என்னும் பழமொழிகள் உண்டு. ஆனால் எனது மைத்துனரின் கல்யாணமோ கலாட்டாகவும், விபரீதமாகவும், வித்தியாசமாகவும், வேதனையான‌ சம்பவமாகவும் நடைபெற்றது. ஆரம்பமுதல் கடைசி வரை குழப்பமாகவே எல்லா நிகழ்ச்சிகளும் நடந்தது.


நான் எங்கே ஏமாறுகிறேன்?

blog image

'''கடுகு அளவு நம்பிக்கை இருந்தால் போதும் மலையையும் புரட்டலாம்''''என்பது பழமொழி. ஆனால் நம்ப வைத்து ஏமாற்றுபவர்களோ பலர். என் தலைமைஆசிரியர் பணியில் நடந்த‌ ஒரு நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள‌ விரும்புகிறேன்.


தக்காளி தளத்தளா

blog image

''''குண்டு, குண்டு தக்காளி
சிவப்பு, சிவப்பு தக்காளி
தங்கமான‌ தக்காளி


இன்று என்ன‌ சமையல்

blog image

அண்டத்தில் ஆறுக் கோடிப் பிரச்சனை.
உலகத்தில் ஒருக் கோடிப் பிரச்சனை.
நாட்டில் நாற்பதாயிரம் பிரச்சனை.
நகரத்தில் நாலாயிரம் பிரச்சனை.
தெருவில் நூறுப் பிரச்சனை.
வீட்டில் எல்லாமே பிரச்சனை.