உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

புரோகோழி (Broccoli)அவியல்

 


தேவையானப் பொருட்கள்

  • புரோகோழி - 1 பெரியது (500 g)
  • மாஜரின் - 1 மே.க
  • உப்பு - 1/2 தே.க
  • தண்ணீர் - 1/2 டம்ளர்

செய்முறை

  • புரோக்கோழியை அப்படியே பெரிய பெரிய மொட்டாக தண்டுடன் வெட்டவும். கீழ்த் தண்டையும் பாதியாக பிளந்து வெட்டிக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் தண்டுப்பகுதி கீழே நிற்கும்படியாக மொட்டுக்களை அடுக்கவும்.
  • உப்பைத் தண்ணீரில் கரைத்து விடவும் .
  • மாஜரினையும் போட்டு மூடியால் மூடி அடுப்பில் வைக்கவும்.
  • தண்ணீர் நன்கு கொதித்தபின், 5 நிமிடங்கள் அடுப்பில் விடவும். பின் அடுப்பை நிற்பாட்டவும். மேலும் 5 நிமிடங்கள் அப்படியே விட்டு, பின் மூடியை நீக்கி விடவும்.
  • ஒரு தடவை மெதுவாக குலுக்கி, பிரட்டி விடவும்.
  • தொடர்ந்து மூடியபடி இருந்தால் அவிந்து கரைந்துவிடும், சுவை போய்விடும்.
  • கடும் பச்சை நிறமாக இருந்தால்தான் சுவையாக இருக்கும்.
  • ஆறியதும் சாப்பிடலாம்.

குறிப்பு:

தண்டை மெதுவாக குத்திப் பார்த்தாலே தெரிந்துவிடும், அவிந்துவிட்டதா என்று. இதை பச்சையாககூட உண்கிறார்கள்.

வழங்கியவர்

அதிரா

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

4 நிமிடங்கள் 12 நிமிடங்கள்
random food image


comments
இந்த மரக்கறி பற்றித் தெரிந்துகொள்வோம்
மார்ச் 23, 2008 - 11:24am - வழங்கியவர் அதிரா

பெரும்பாலும் குழந்தைகள் மரக்கறிகளை விரும்பி உண்பதில்லை. அவர்களுக்கு, இதனை இதே முறையில் செய்து பின்னேரங்களில் உண்ணக் கொடுக்கலாம். பாலூட்டும் தாய்மார், கர்ப்பிணித் தாய்மாருக்கு இது மிகவும் நல்லது. வெளிநாடுகளில் குழந்தை வயிற்றிலிருக்கும்போது இதனை உண்ணும்படி வைத்தியசாலைகளிலேயே சொல்கிறார்கள்.
இதனை உண்பதனால் ஆண்களுக்கு வரும் Prostate Cancer ஐக் கூடத் தடை செய்யமுடியும் என்று மருத்துவ ஆராச்சிகள் கூறுகின்றன.
இதில் அடங்கியுள்ள சத்துக்கள்,

விற்றமின் B3 & C
வ்போலிக் அசிட்(Folic acid)
கல்சியம்
மக்னீசியம்
பொஸ்பரஸ்
பைவர்(Fibre)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மாஜரின்
ஏப்ரல் 19, 2008 - 9:46am - வழங்கியவர் chitraleka.ramc...

அன்பு சகோதரி, மாஜரின் என்றால் என்ன? தயவுசெய்து விளக்கவும்? அது எங்கு கிடைக்கும்?

அன்பு சித்திரலேகா
ஏப்ரல் 19, 2008 - 1:09pm - வழங்கியவர் அதிரா

அன்பு சித்திரலேகா,
மாஜரின்(margarine) என்பது, எல்லாக் குறோசறிகளிலும் கிடைப்பதுதான்.bread க்கு போடுவோமே அதுதான். இதற்குப் பதில் butter கூட பாவிக்கலாம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்